ஒருவர் மற்றவரோடு நம்பிக்கையை கட்டமைத்துக் கொள்ளுதல்

சிந்தித்து தகவல் தொடர்பு கொள்ளுதல்

நாம் எப்போதுமே கட்டுப்பாடுடனும், குறிக்கோளுடனும் செயல்பட கடும் முயற்சி எடுப்பதால், நாம் எவ்விதத்தில் தகவல் தொடர்பு கொள்கிறோம் என்பதில் சிந்தித்து செயல்பட வேண்டியது அவசியமாகிறது.

Flex நிறுவனத்தின் சார்பாக நமது குழுவின் அங்கீகாரம் பெற்ற உறுப்பினர்கள் மட்டுமே பொதுவெளியில் பேசுவார்கள். இது, நமது செய்திகள் தெளிவானதாகவும், நமது குறிக்கோள்களுக்கு ஆதரவளிக்கும் வகையிலும் இருப்பதை உறுதி செய் கின்றது. தயவுசெய்து மேலும் அதிகமாகத் தெரிந்து கொள்வதற்கு, நமது ஊடக உறவுகள் தொடர்பான கொள்கையைப் பார்க்கவும்.

சமூக ஊடகம் அல்லது அனைவராலும் அணுக இயலும் இணையதளங்களைப் பயன்படுத்தும் போது நாம் பின்வருவனவற்றைக் கடைபிடிக்க வேண்டும்:

  • Flex நிறுவனம் மற்றும் அதன் வாடிக்கையாளர்கள் அல்லது அதன் துணை வணிக நிறுவனங்கள் குறித்த தகவல்களை ஒருபோதும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்
  • பொது இடத்தில், Flex நிறுவனம் குறித்த நிறுவனத் தகவல் எதையும் தெரிவிப்பதற்கு முன்பாக, பெரு நிறுவனத் தகவல் தொடர்புக் குழுவிடமிருந்து அனுமதி பெற்றுக்கொள்ளுங்கள்
  • சமூக ஊடகத்தில் ஒருபோதும் இரகசியமான தகவல்களைப் பகிர்ந்து கொள்ளாதீர்கள்
  • நமது நடத்தை விதியும், நமது கொள்கைகளும் சமூக ஊடகப் பதிவுகள் உள்ளிட்ட அனைத்து வகையான இணையவழி நடத்தைகளுக்கும் பொருந்துகிறது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்
  • மேலும் அதிகமாகத் தெரிந்து கொள்ள நமது சமூக ஊடகம் தொடர்பான கொள்கை, வழிமுறை மற்றும் நடைமுறைகளைப் பார்க்கவும்
தொடர்ந்து வாசிக்கவும்

உலகெங்கிலும் நம்பிக்கையைக் கட்டியமைத்தல்

அடுத்த பிரிவு