உலகெங்கிலும் நம்பிக்கையைக் கட்டியமைத்தல்

மனித உரிமைகளைப் பாதுகாத்தல்

Flex எங்கெல்லாம் செயல்படுகிறதோ அங்கெல்லாம், நாம் மனித உரிமைகளுக்கு மரியாதை கொடுக்கிற, மதிப்பளிக்கிற மற்றும் ஊக்கம் அளிக்கின்ற விதத்திலேயே தொழிலை நடத்துகிறோம்.

நாங்கள் ஐக்கிய நாட்டுச் சபையின் அகில உலக மனித உரிமைகள் பிரகடனத்தையும் (United Nations Universal Declaration of Human Rights (UDHR)), தொழில் மற்றும் மனித உரிமைகள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் வழிகாட்டும் கோட்பாடுகளையும் (United Nations Guiding Principles on Business and Human Rights (UNGPs)) நாங்கள் ஆதரிக்கிறோம் மற்றும் நிலைநிறுத்துகிறோம். இத்தகைய அர்ப்பணிப்புகளுக்கு ஒத்த விதமாக, Flex நிறுவனம்:

  • ஆட்கடத்தல், கட்டாயப் பணியாளர் மற்றும் குழந்தைப் பணியாளர் ஆகியவற்றைத் தடை செய்கிறது
  • பாதுகாப்பான, மனித நேயத்துடன் கூடிய பணியாற்றும் நிபந்தனைகளை வழங்குகிறது
  • பொருந்தக்கூடிய சம்பளம் மற்றும் பணி நேரச் சட்டங்களைப் பின்பற்றுகிறது
  • கூட்டு பேரம் மற்றும் சங்கம் அமைக்கும் உரிமைகள் உட்பட நியாயமான மற்றும் நேர்மையான ஊதியங்கள், பலன்கள் மற்றும் வேலைக்கான நிபந்தனைகள் ஆகியவற்றை வழங்குகிறது
  • துன்புறுத்தல் மற்றும் பாகுபாடு காண்பித்தல் ஆகியவை இல்லாத பணியாற்றும் சூழலை வளர்க்கிறது

Flex நிறுவனம் செயல்படும் இடமெங்கிலும் சந்தேகத்திற்கு இடமான மனித உரிமைகள் தொடர்பான ஆபத்துக்கள் ஏதேனும் இருந்தால் அதை Flex நிறுவனத்தின் நிர்வாகத்திற்கு உடனடியாகத் தெரிவிக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். Flex நிறுவனத்தோடு இணைந்த நிறுவனங்களிலும் இதையே நாம் எதிர்பார்க்கிறோம்.

தொடர்ந்து வாசிக்கவும்

வளங்கள்

அடுத்த பிரிவு