முன்னுரை

நமது நடத்தை விதியின்படி வாழ்தல் மற்றும் பணியாற்றுதல்

Flex நிறுவனத்தின் நீடித்த மற்றும் நிலையான வெற்றியானது, இந்த வியாபார நடத்தை விதிகள் மற்றும் நன்னெறிகளின்படி நாம் வாழவும், பணியாற்றவும் நம்மை அர்ப்பணித்துக் கொள்வதைச் சார்ந்தே அமைகிறது.

நடத்தை விதியின்படி வாழ்தல் மற்றும், பணியாற்றுதல் என்பதன் பொருள் என்னவென்றால்:

  • நாம் பொருந்தக்கூடிய சட்டத்திற்கு இணங்கி நடந்து, எப்போதுமே நமது கொள்கைகளையும், மதிப்புகளையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

  • நாம் அனைவருமே, இணக்கமான கலாச்சாரத்தில் பணியாற்ற வேண்டுமென்று எதிர்பார்க்கிறோம்.

  • நாம் கேள்வி கேட்பதை ஊக்குவிக்கும் ஒரு சூழலை வளர்க்கிறோம் மற்றும் நாம் மற்றவர்களையும் இவ்விதியின்படி வாழவும், பணியாற்றவும், சவால் விடுகிறோம்.

  • நமக்குப் பிரச்சினைகள் ஏற்படும் போது நாம் வெளிப்படையாகப் பேச வேண்டும் மற்றும் தேவைப்படும்போது, கேள்விகளைக் கேட்க வேண்டும்.

  • நாம் பழிவாங்கக்கூடாது அல்லது யாரும் பழிவாங்குவதைச் சகித்துக் கொள்ளவும் கூடாது.

  • நாம் புலனாய்வுகளுக்கும், விசாரணைகளுக்கும் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். விசாரணைகளின் போது நாம் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும் மற்றும் தகவல்களை மறைக்கவோ அல்லது அழிக்கவோ கூடாது.

தலைவர்களாக, மேலாளர்களுக்கென்று பிரத்தியேகமானப் பணி உள்ளது. மேலாளர்களிடம் தான் முதல் முதலில் தகவல்களைத் தெரிவிக்க வேண்டும். நமது விதியை அல்லது சட்டத்தை மீறுவது தொடர்பான எந்தப் பிரச்சினைகளும் மேலாளர்களின் பொறுப்புக்கு உட்பட்ட கவலைகளேயாகும். தங்களது பதவியில் மிகவும் சிறப்பாகச் செயல்படுவதற்கு, மேலாளர்கள்:

  • பணியாளர்கள் தங்களது பிரச்சனைகளை தெரிவிக்க சௌகரியமாக உணரும் வகையில், திறந்த மனதோடு இருக்க வேண்டும்
  • பிரச்சினைகளை முறையாகவும், குறித்த நேரத்திலும் மேலதிகாரிக்கு எடுத்துச் செல்ல வேண்டும்
  • நமது நடத்தை விதிகளைப் பின்பற்றுவதில் ஒரு முன் மாதிரியாகச் செயல்பட வேண்டும்

நமது திறந்த கதவுக் கொள்கையின் படி, பணியாளர்கள் பெரும்பாலும் தங்களது பிரச்சினைகளுக்கு, அடிக்கடி மேலாளர்களையே அணுகுவார்கள் அல்லது மேலாளர்களே தவறான நடத்தை யை குறித்து நேரடியாக காணலாம். நன்னெறி மற்றும் இணக்க நடவடிக்கை குழுவிடம், புகாரளிக்கும் வசதி வாயிலாகவோ அல்லது compliance.counts@flex.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ உடனடியாகப் புகாரளிக்க வேண்டிய விவகாரங்களின் வகைகள் குறித்த ஒரு துரித குறிப்புதவி கையேடு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு குறிப்புதவிக்கான கருவியாகப் பயன்பட மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது மற்றும் இது எல்லாவற்றையும் உள்ளடக்கியதோர் பட்டியல் அல்ல, ஆகவே ஒரு பிரச்சினையை, ‘நன்னெறி மற்றும் இணக்க நடவடிக்கைக் குழுவிடம்’ மேல்நடவடிக்கைக்காக எடுத்துச் செல்ல வேண்டுமா என்பது குறித்து உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், அப்பிரச்சினையை நீங்கள் எழுப்பவேண்டும்.

ஒரு மேலாளராக, புகாரளிப்பதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?

உடனடியாக புகாரளிக்க வேண்டிய காரியங்களில் அடங்கும் குற்றச்சாட்டுக்கள்:

இவ்விதியின் படி வாழ்வதும், பணியாற்றுவதும் ஒவ்வொருவரின் பணியாகும். நமது விதியானது, Flex நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்களுக்காகப் பணியாற்றும் அனைவருக்கும், அல்லது Flex நிறுவனத்தின் சார்பாக, பணியாளர்களாகவோ, முகமைத் தொழிலாளர்களாகவோ, அலுவலர்களாகவோ, வாரிய உறுப்பினர்களாகவோ அல்லது வணிகத் துணை நிறுவனங்களாகவோ தொழில் நடத்துபவர்களுக்கும் பொருந்துகிறது. Flex நிறுவனத்தின் வணிகத் துணை நிறுவனங்களில், தற்காலிக அலுவலர்கள், விற்பனையாளர்கள், வழங்குநர்கள், ஒப்பந்ததாரர்கள், ஆலோசகர்கள், பிரதிநிதிகள் மற்றும் Flex நிறுவன முகவர்கள் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

தொடர்ந்து வாசிக்கவும்

நன்னெறி சார்ந்த முடிவுகளை எடுத்தல்

அடுத்த பிரிவு