ஒருவர் மற்றவரோடு நம்பிக்கையை கட்டமைத்துக் கொள்ளுதல்

Flex நிறுவனச் சொத்துக்களுக்கு மதிப்பளித்தல்

மக்களின் வாழ்வை மேம்படுத்தும் அற்புதமான பொருட்களை நாம் எவ்வாறு உருவாக்குகிறோம் என்பதில் Flex நிறுவனச் சொத்துக்கள் முக்கிய பங்காற்றுகின்றன.

புதிய கண்டுபிடிப்புகளைப் பொறுப்புடன் மேற்கொள்ள, நாம் அத்தகைய சொத்துக்களைப் பேணிப் பாதுகாத்திட வேண்டும். Flex நிறுவனச் சொத்துக்கள் மூன்று முக்கியமான வகைகளில் வருகின்றன.

இதில் காப்புரிமைகள், வணிகச்சின்னங்கள், பதிப்புரிமைகள், வர்த்தக இரகசியங்கள், செய்நுட்ப அறிவு மற்றும் ஏதேனும் பிற புலப்படாத தனிப்பட்ட சொத்துக்கள் ஆகியவை உள்ளடங்குகின்றன. நாமும், வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகப் பங்குதாரர்கள் உள்ளிட்ட மூன்றாம் தரப்பினரின் அறிவு சார் சொத்துரிமைகளுக்கு (IP) மதிப்பளிக்க வேண்டும். அனுமதி பெற்று மட்டுமே மூன்றாம் தரப்பினரின் அறிவு சார் சொத்துக்களைப் (IP) நம்மால் பயன்படுத்த முடியும் மற்றும் முறையாக அங்கீகாரம் பெற்ற மற்றும் உரிமம் பெற்ற மென்பொருளையே நம்மால் பயன்படுத்த முடியும். Flex IT வாயிலாக அனுமதி மற்றும் உரிமங்களைப் பெறாமல் மூன்றாம் தரப்பினரின் அறிவு சார் சொத்துக்களைப் (IP) நாம் ஒருபோதும் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டோம்.

  • பணியாற்றும் இடவசதிகள், கணினிகள் மற்றும் தொலைபேசிகள்ஆகியவை நமது இயல் சொத்துக்களில் உள்ளடங்குகின்றன. இச்சொத்துக்களைத் திருட்டு, அழிவு மற்றும் தவறாகப் பயன்படுத்தப்படுதல் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாம், நமது மடிக்கணினிகளையும், பிற கருவிகளையும், அனைத்து நேரங்களிலும் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும் மற்றும் அவை தொலைந்து போனாலோ அல்லது திருட்டுப் போனாலோ அது குறித்து உரிய நேரத்தில் புகாரளித்திட வேண்டும்.
  • இத்தகைய சொத்துக்களில் வாடிக்கையாளரின் புதுமையான கண்டுபிடிப்பின் அல்லது கருத்துப்படிவத்தின் இயல் ரீதியிலான வெளிப்பாடாக விளங்கும் முன் மாதிரிகள், வாடிக்கையாளரின் கருத்துப்படிவத்தைச் சோதனை செய்யப் பயன்படும் ஒரு மாதிரி அல்லது உத்தேசிக்கப்படும் வடிவமைப்பின் முக்கிய செயல்பாட்டு அம்சங்களை சரிபார்க்கும் ஒரு செயல்முறை ஆகியவையும் உள்ளடங்கக்கூடும்.

நமது தொழில்நுட்பத்தில் நமது மென்பொருளும், தகவல்தொடர்பு அமைப்புகளும் உள்ளடங்கக்கூடும். தரவுக் கசிவுகளுக்கு எதிராக அல்லது மற்ற இணையப் பாதுகாப்பு சம்பவங்களுக்கு எதிராக நமது கணினி அமைப்புகளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள, நாம் அனைத்து நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும். பயனர் ID -கள் மற்றும் கடவுச்சொற்களைப் பகிர்ந்து கொள்வது கண்டிப்பாகத் தடை செய்யப்படுகிறது மற்றும் பரிச்சயமில்லாத Wi-Fi நெட்வொர்க்குகளோடு இணைக்கும் போதும், மென்பொருளைப் பதிவிறக்கம் செய்யும் போதும் அல்லது இணைப்புகளை அணுகும் போதும் நாம் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.

சொத்தின் முறைப்படியான பயன்பாடு

நமது இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பணியைத் தொடர, நாம் Flex நிறுவனச் சொத்துக்களைப் பயன்படுத்துகிறோம். வெளிப்படையான, மனதைப் புண்படுத்தக்கூடிய அல்லது பாகுபாடு காட்டுகின்ற விஷயங்களைப் பதிவிறக்கம் செய்யவோ, சேமித்து வைக்கவோ அல்லது அனுப்பி வைக்கவோ அவற்றை நாம் பயன்படுத்தக்கூடாது. சட்டம் அனுமதிக்கும் அளவுக்கு, Flex நிறுவனம் நமது ஒப்புதலுடனோ அல்லது ஒப்புதல் இல்லாமலோ எந்த விதமான தகவல் தொடர்புகளையும், தரவுகளையும் அல்லது சாதனங்களையும் அணுகலாம், தேடலாம் அல்லது மறுஆய்வு செய்யலாம்.

 

தரவுக் கசி வைகையாளுதல்

நிறுவனத்தின் கணினி அமைப்புகளை யாரோ அங்கீகாரமில்லாமல் அணுகியிருக்கிறார்கள் என்றோ அல்லது நிறுவனத்தின் கணினி அமைப்புகளிலிருந்து தகவல் கசிந்திதுள்ளது என்றோ நாம் சந்தேகித்தால், நம்முடைய தரவுக் கசிவுக் கொள்கையைப் பின்பற்றி, அந்த நிகழ்வை உடனடியாக dataprotection@flex.com என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தெரிவிக்க வேண்டும்.

உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்

சமீபத்தில் எங்களுடைய கணினி அமைப்புகளைப் புதுப்பிப்பதில் எங்களுக்கு உதவுவதற்காக, எங்களுடைய பணியிடத்திற்கு ஒரு வெளிப்புற IT ஆலோசகரை வரவழைத்திருந்தோம். அவர் தனது சேவையின் ஒரு பகுதியாக சில “கூடுதல் நன்மைகளை” எங்களுக்குத் தந்து உதவுவதாக என்னிடம் சொன்னார். முதலில், நான் அதைப் பாராட்டும் மனநிலையில் இருந்தேன், பின்பு தான், அவர் உரிமம் பெறாத மென்பொருளை எனது கணினியில் சேர்த்து க்கொண்டிருந்தார் என்பதை நான் புரிந்து கொண்டேன். இது நிலையான ஒரு நடைமுறை தானா?

இல்லை. அவரது நோக்கத்தைக் கருத்தில் கொள்ளாமல் பார்க்கும் போது, அந்த IT ஆலோசகர், Flex நிறுவனக் கொள்கைக்கும், சட்டத்திற்கும் எதிராகச் செயல்பட்டுள்ளார். நாம் ஒருபோதும் உரிமம் பெறாத மென்பொருளை பயன்படுத்துவதில்லை. இந்த விஷயத்தை உடனடியாக உங்கள் மேலாளருக்குத் தெரிவிக்கவும். உரிமம் பெறாத மென்பொருளை நிறுவனக் கருவிகள் அனைத்திலிருந்தும் அகற்றிவிட வேண்டும் மற்றும் அந்த IT ஆலோசகரின் முதலாளிக்கு இந்த விதிமீறல் குறித்துத் தகவல் தெரிவிக்க வேண்டும். கூடுதலாக, இலவசம் என்றோ, அல்லது மதிப்பாய்வு செய்யும் மென்பொருள் என்றோ விளம்பரம் செய்யப்படும் மென்பொருள் பதிவிறக்கங்கள் மாணவர்களுக்கு அல்லது சிறு தொழில் செய்பவர்களுக்கு மட்டுமே “இலவசம்” ஆக வழங்கப்படுகிறது மற்றும் அது, Flex நிறுவனம் போன்ற பெரிய நிறுவனத்திற்குப் பொருந்தாது. Flex IT -யிடம் அனுமதி பெற்றே மென்பொருள் சேர்க்கப்பட வேண்டும்.

தொடர்ந்து வாசிக்கவும்

நலன் முரண்பாடுகளைத் தவிர்த்தல்

அடுத்த பிரிவு