உலகெங்கிலும் நம்பிக்கையைக் கட்டியமைத்தல்

அனைத்து வர்த்தகத் தடைகள், வணிகத் தடையாணைகள், மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுச் சட்டங்கள் ஆகியவற்றிற்கு கீழ்ப்படிதல்

Flex நிறுவனம் உலகெங்கிலும் வணிகம் மேற்கொள்கிறது. எனவே, நாம் யாரோடெல்லாம் எப்படி, எங்கே தொழில் புரியலாம் என்பதைக் கட்டுப்படுத்தக்கூடிய பல்வேறு விதமான வர்த்தகச் சட்டங்களுக்கு நாம் உட்பட்டவர்களாகிறோம்.

நாம் செயல்படும் ஒவ்வொரு நாட்டிலுமுள்ள, வர்த்தகத் தடைகள், வர்த்தகத் தடை ஆணைகள் மற்றும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிச் செயல்பாடுகள் தொடர்பான பொருந்தக்கூடிய வர்த்தகச் சட்டங்கள் அனைத்திற்கும் நாம் இணங்கிச் செல்ல வேண்டியது அவசியமாகிறது. பின்வரும் நிலைகளில் நாம் இணங்கி நடப்பதை உறுதி செய்கிறோம்:

  • யாரோடு நாம் தொழில் செய்கிறோம் என்பதை நாம் தெரிந்து கொண்டு, அதற்குப் பொருந்தக்கூடிய நிலையான சட்டங்கள் என்னென்ன என்பதைத் தெரிந்து கொள்ளும் போது நாம் இணங்கி நடப்பதை உறுதி செய்கிறோம்
  • சட்டப்படி தடைசெய்யப்பட்டுள்ள நிறுவனங்கள் அல்லது தனிநபர்களோடு ஒருபோதும் வணிகம் செய்யாமலும், வர்த்தகத் தடை ஆணைகளுக்கு அல்லது பொருளாதாரத் தடைகளுக்கு உட்பட்டுள்ள நாடுகளோடு அங்கீகாரமற்ற பரிவர்த்தனைகளைச் செய்யாமலும் நாம் இணங்கி நடப்பதை உறுதி செய்கிறோம்.
  • இராணுவப் பொருட்கள் அல்லது இரட்டை உபயோகப் பொருட்கள் போன்ற, குறிப்பிட்ட தயாரிப்புகளில் விதிக்கப்பட்டுள்ள வர்த்தகக் கட்டுப்பாடுகளுக்குக் கட்டுப்படுவதன் மூலம் நாம் இணங்கி நடப்பதை உறுதி செய்கிறோம்

 

புறக்கணிப்பு-எதிர்ப்புச் சட்டங்கள்

Flex நிறுவனம், அனைத்து பெடரல் புறக்கணிப்பு எதிர்ப்பு வர்த்தக மற்றும் வரிச் சட்டங்களுக்கு இணங்கி நடக்க வேண்டியது அவசியமாகிறது. அமெரிக்க அரசாங்கம் தடை விதிக்காத சர்வதேச புறக்கணிப்புகளுக்கு நாங்கள் ஒத்துழைப்பு அளிக்க மாட்டோம் மற்றும் எந்த ஒரு புறக்கணிப்பு வேண்டுகோளையும் குறித்து நாங்கள் அமெரிக்க அரசாங்கத்திற்குத் தகவல் தெரிவிப்போம்.

உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்

Flex நிறுவனத்திற்காக நான் ஆற்றும் பணி குறித்து நான் உற்சாகமாக இருக்கிறேன். நாம் செய்யும் பணியானது, மக்கள் ஆரோக்கியமாக இருப்பதற்குத் தேவையான தயாரிப்புகள் அவர்களுக்கு கிடைக்கப்பெறுமாறு செய்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளும் போது நமது சுகாதாரப் பராமரிப்புத் தொழிலில் நான் பணியாற்றுவது எனக்குப் பிடித்திருக்கிறது. எனினும், சமீபத்தில், வழங்கு பொருட்களையும், தயாரிப்புகளையும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்வது என வரும் போது, நமது பரிசோதனை நடைமுறைகள் குறித்து நமது பணியிடம் அலட்சியமாக இருப்பதை நான் பார்க்கிறேன். இங்கே நமது கலாச்சாரமானது, அது இருக்க வேண்டிய அளவுக்குக் கடுமையானதாக இல்லை. இதை நான் எனது மேலாளரின் கவனத்திற்குக் கொண்டு வந்தேன், ஆனால் நான் மிகவும் அதிகமாகக் கவலைப்படுவதாக என்னிடம் சொல்லி விட்டார்கள். தடைகளுக்கு இணங்கி நடப்பது ஒன்றும் முன்னுரிமை அளிக்க வேண்டிய விஷயம் அல்ல எனவும், வழங்கு பொருட்களை கொண்டு செல்வதில் நாம் சிறப்பாகச் செயல்படுகிறோம் என்பதே முக்கியம் என்று மேலாளர் சொல்லி விட்டார். நான் என்ன செய்ய வேண்டும்?

தடைகளுக்கு இணங்கி நடப்பது நமது புகழுக்கும், நமது வணிகத்திற்கும் மிகவும் முக்கியமானதாகும். நீங்கள் உங்கள் கவலைகளை, வர்த்தகத்திற்கான இணக்க நடவடிக்கை இயக்குநரிடம் அல்லது நன்னெறி மற்றும் இணக்க நடவடிக்கைக் குழுவிடம் தெரிவிக்க வேண்டும் அல்லது நமது இரகசியமாகப் புகாரளிக்கும் கருவியைப் பயன்படுத்த வேண்டும். நாம் வணிகம் செய்யும் இடத்தில் எல்லாம், அனைத்து வர்த்தகச் சட்டங்களுக்கும் முழுமையாக இணங்கி நடப்பதை உறுதி செய்ய, நமது பணியிடங்களில் செயல்திறன் மிக்க பரிசோதனை நடைமுறைகள் இருக்க வேண்டும்.

தொடர்ந்து வாசிக்கவும்

நமது சமூகங்களுடன் ஈடுபடுதல்

அடுத்த பிரிவு