பரிசுப் பொருட்கள் மற்றும் பொழுதுபோக்கு
நமது வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகப் பங்குதாரர்கள் மீது நமக்குள்ள வலுவான, நம்பிக்கையூட்டும் உறவுகளின் மீதே நமது வெற்றியானது கட்டமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய உறவுகளைக் கட்டி எழுப்புவதற்கும் பராமரிப்பதற்கும், நாம் நியாயமான பரிசுப்பொருட்களை மற்றும் பொருத்தமான பொழுதுபோக்கு வசதிகளை, ஒருசில சூழ்நிலைகளில் வழங்கவோ அல்லது பெறவோ செய்யலாம்.
எனினும், பெறுபவரை ஏதேனும் விதத்தில் கடமையுள்ளவராக்குகிற அல்லது கடமையுள்ளவராக்கச் செய்வதாகத் தோற்றமளிக்கிற பட்சத்தில், நாம் ஒரு போதும் அதுபோன்ற பரிசுப் பொருட்கள் அல்லது பொழுதுபோக்கு வசதிகளை வழங்கவோ அல்லது பெறவோ மாட்டோம். Flex நிறுவனக் கொள்கைகளின் கீழ், ஒரு நாட்டில் அனுமதிக்கப்படும் ஒரு பரிசுப்பொருளானது அதைப் பெறுபவரின் நாட்டாலோ அல்லது நிறுவனத்தாலோ தடைசெய்யப்பட்டதாக இருக்கலாம். ஒரு பரிசுப்பொருளைக் கொடுக்கும் போது அல்லது பெறும் போது, Flex நிறுவனத்தின் பரிசுப்பொருட்கள் மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான வழிகாட்டுதல்களைப் பாருங்கள் மற்றும் ஒரு பரிசுப் பொருளானது அனுமதிக்கப்படுகிறதா என்பது குறித்த கேள்வி எதுவும் இருந்தால், எப்போதுமே மேலாளர் ஒருவரிடமோ அல்லது நன்னெறி மற்றும் இணக்க நடவடிக்கைக் குழுவிடமோ கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
வணிக முடிவுகளில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய அல்லது ஆதிக்கம் செலுத்துவதாகத் தோன்றக்கூடிய எந்தப் பரிசுப்பொருட்களையோ, பொழுதுபோக்கு வசதிகளையோ அல்லது வணிகத்திற்காக அளிக்கப்படும் பிற வசதிகளையோ நாம் ஒருபோதும் கேட்பதோ அல்லது ஏற்றுக்கொள்வதோ இல்லை. வணிக உறவில் மதிப்புள்ள ஏதோவொன்றை நமக்குக் தர முன்வந்தாலோ அல்லது கொடுத்தாலோ, அதை நாம் உடனடியாக மேலாளர் ஒருவரிடம் தெரிவிக்க வேண்டும்.
உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்
எனது குழுவானது, வாடிக்கையாளர் ஒருவரின் தானியங்கித் திறன்களைக் கட்டமைத்துக் கொடுப்பதில் நெருக்கமாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறது. அந்த அமைப்பைச் செயல்படச் செய்ய நாங்கள் அநேக மேடு பள்ளங்களைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறோம். சமீபத்தில், இந்த வாடிக்கையாளரின் நிறுவனத்திலிருந்து வந்த மேலாளர் ஒருவர், எனக்கு ஒரு அழகான மற்றும் அசத்தலான பரிசுப்பொருளைக் கொடுக்க முன்வந்தார். எனக்கு எப்போதெல்லாம் தேவையோ அப்போதெல்லாம், அவரது நிறுவனத்தின் சீசன் டிக்கெட்டுகளை கூடைப்பந்து மற்றும் ஹாக்கி விளையாட்டுப்போட்டிகளைப் பார்க்கப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அவர் என்னிடம் சொன்னார். அவர் சொல்கையில், அவை அனைத்தையும் அவர் ஒரு போதும் உபயோகிப்பதில்லை என்றும், அவரது நிறுவனத்தில் நான் ஆற்றும் பணிக்கு அது எனக்குத் தகுதியானதே என்றும் சொன்னார். அது எனக்கு ஆசையைத் தூண்டுவதாக இருந்தது, ஆனால், இது நமது கொள்கையை மீறுவதாக ஆகிவிடாதா?
ஆம், அனுமதியில்லாமல், வாடிக்கையாளர் ஒருவரிடமிருந்து மதிப்புள்ள பெரிய பரிசுப் பொருள் ஒன்றை ஏற்றுக்கொள்வது, Flex நிறுவனக் கொள்கைக்கு எதிரானதாகும். நமது பணியில் உள்ள தரத்தின் அடிப்படையிலேயே நாம் வியாபாரத்தை வென்று அதைத் தக்க வைத்துக்கொள்கிறோம். ஓரே ஒரு விளையாட்டுப் போட்டிக்கு (உரிய அனுமதியோடு) நுழைவுச் சீட்டுக்களை ஏற்றுக்கொள்வது பரவாயில்லை என்றாலும், ‘சீசன் டிக்கெட்டுகளை” பரிசாகப் பெறுவது உங்கள் வணிக முடிவில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஒன்றாகக் கருதப்படக்கூடும். நீங்கள் அச்சலுகையை பணிவோடு மறுத்து விட்டு, அந்தச் சலுகை குறித்து உங்கள் மேலாளருக்குத் தகவல் தெரிவித்திட வேண்டும்.