துல்லியமான கணக்குப் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளைப் பராமரித்தல்
பத்தாண்டுகளுக்கும் மேலான நீண்ட வரலாற்றில், Flex நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள், வணிகப் பங்குதாரர்கள், பங்கு உரிமையாளர்கள், பொதுமக்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் ஆகியோரிடம் நம்பிக்கையைக் கட்டமைத்துள்ளது. இந்த நம்பிக்கையைத் தக்க வைத்துக்கொள்ள, நாம் நேர்மையான மற்றும் துல்லியமான கணக்குப் புத்தகங்களையும், பதிவேடுகளையும் உருவாக்கிப் பராமரிப்பது அவசியமாகிறது.
வணிகத்தின் போக்கில் நாம் கையாளுகிற பதிவுகளின் நேர்மை மற்றும் துல்லியத்தன்மைக்கு நாம் ஒவ்வொருவருமே பொறுப்பானவர்களாவோம்.
துல்லியமான பதிவுகளைப் பராமரிப்பதற்கு நாம் பின்வருவனவற்றைச் செய்ய வேண்டும்:
- பரிவர்த்தனைகள் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அதைக் கருத்தில் கொள்ளாமல் அனைத்து நிதிப் பரிவர்த்தனைகளையும் அங்கீகரித்து, செயல்படுத்தி, பதிவு செய்ய வேண்டும்
- Flex நிறுவனப் பதிவுகளில் எந்தத் தகவல்களையும், ஒருபோதும் தவறாகக் காட்டாமலும், விடுதல் இல்லாமலும், மாற்றம் செய்யாமலும், மறைக்காமலும், வேறுவழியில் தவறாகச் சித்தரிக்காமலும் இருக்க வேண்டும்
- Flex நிறுவனத்தின் உள் கட்டுப்பாடுகளில் ஏதேனும் துல்லியமற்ற தன்மைகள் அல்லது விதிமீறல்கள் இருந்தால் அதை அடையாளமின்றி புகாரளிக்க இயலும் மூன்றாம் தரப்பு நேரடித் தொலைபேசி எண் அல்லது புகாரளிக்கும் இணையதளம், உட்பட, இங்கே
- எந்த நோக்கத்திற்காகவும், ஒருபோதும் வெளிப்படுத்தப்படாத அல்லது பதிவு செய்யப்படாத பெரு நிறுவன நிதிகளை கையில் வைத்திருக்கக்கூடாது
- எல்லா நிதிப் பரிவர்த்தனைகளையும் முழு வெளிப்படைத்தன்மையோடு மேற்கொள்ள வேண்டும்—இதன் பொருள் என்னவென்றால் அங்கீகரிக்கப்பட்ட நபர்களோடு மட்டுமே பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும் மற்றும் பொருந்தக்கூடிய பண மோசடி தொடர்பான சட்டங்கள் அனைத்திற்கும் இணங்கி நடக்க வேண்டும்
பட்டியலிடப்பட்டுள்ள ஆதாரங்களில் ஒன்றிற்கு, உடனடியாகத் தெரிவிக்க வேண்டும்
பயணம் மற்றும் பொழுதுபோக்குக் கொள்கை
Flex நிறுவனம் ஓர் உலகளாவிய நிறுவனமாக இருப்பதால், பணியாளர்கள் அடிக்கடி வியாபாரத்துக்காகப் பயணம் செய்கின்றனர். பயணிக்கும் போது, நாம் அனைவரும் பயணம் மற்றும் பொழுதுபோக்குக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பொருள் என்னவென்றால் துல்லியமானப் பதிவுகளைப் பராமரிக்க வேண்டும் மற்றும் வியாபாரப் பயணத்தோடு நேரடியாகத் தொடர்புடையதாகவும், செலவளித்த பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு ஏற்ற வகையிலும் இருக்கும் இரசீதுகளை மட்டுமே பணத்தைத் திருப்பிப் பெறுவதற்காக சமர்ப்பிர்க்க வேண்டும்.