உலகெங்கிலும் நம்பிக்கையைக் கட்டியமைத்தல்

உள் வர்த்தகம்

வேகமாக வளர்ந்து வரும் ஒரு சக்தி வாய்ந்த வணிக நிறுவனமாக, Flex நிறுவனம் எப்போதும் வளர்ச்சியடைந்து வருகிறது. நாம் எவ்வாறு படிப்படியாக வளர்ந்து வருகிறோம் என்பது குறித்த தகவல்கள், முதலீட்டாளர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துவதாக இருக்கலாம், ஆனால், அவை அனைத்தும் பொதுத் தகவல்கள் அல்ல.

Flex நிறுவனத்தில் நமது பணிகளின் போது, நாம் (material non-public information (MNPI)) பொதுத்தகவல் அல்லாத தகவல்களைக் கடந்து வரலாம். MNPI தகவல்கள் Flex நிறுவனத்திற்கோ அல்லது அதன் வாடிக்கையாளர்களுக்கோ, வழங்குநர்களுக்கோ அல்லது வணிகப் பங்குதாரர்களுக்கோ அல்லது பிற மூன்றாம் தரப்பு நபர்களுக்கோ பொருந்தலாம்.

MNPI தகவல்களின் அடிப்படையில் வர்த்தகம் செய்வதோ அல்லது வர்த்தகம் செய்வதற்காக MNPI தகவலை இன்னொரு நபருக்கு குறிப்பாகக் கொடுப்பதோ உள்வர்த்தகமாகும். Flex நிறுவனம், உள் வர்த்தகத்தைத் தடை செய்கிறது, மற்றும் சட்டமும் அவ்விதமே தடை செய்கிறது. MNPI தகவல் கையில் இருக்கையில் அதை மற்றவர்களுக்கு குறிப்பாகக் கொடுக்கும் அல்லது அதை வர்த்தகம் செய்யும் எவரும், குடிமையியல் மற்றும் குற்றவியல் பொறுப்புரிமைக்கு உள்ளாக்கப்படுவர். இதில், பெரியளவிலான நிதி அபராதங்கள் மற்றும் சிறைதண்டனை கூட உள்ளடங்கலாம். நாம் அல்லது நமது குடும்ப உறுப்பினர்கள் அல்லது வீட்டில் உள்ள நபர்கள் எவரும் ஒரு போதும் MNPI தகவல்களை குறிப்பாக அளிக்கவோ அல்லது வர்த்தகம் செய்யவோ கூடாது. Flex நிறுவனத்தோடு தொடர்புடைய எவரும், உள் வர்த்தகத்தில் ஈடுபடுவதாக நாம் சந்தேகித்தால், நாம் எப்போதுமே, நமது புகாரளிக்கும் சேனல்களில் ஒன்றின் வாயிலாகவே அதைத் தெரிவிக்க வேண்டும்.

 

பொதுத்தகவல் அல்லாத தகவல் (MNPI) என்றால் என்ன?

MNPI என்பது, ஒரு நியாயமான முதலீட்டாளர் குறிப்பிட்ட பங்குப் பத்திரத்தை வாங்கும் அல்லது விற்கும் அல்லது தக்க வைத்திருக்கும் முடிவை எடுப்பதில் முக்கியமானதாக விளங்கும் பொதுமக்களுக்குக் கிடைக்கப் பெறாத தகவலாகும். நினைவில் கொள்ளுங்கள், MNPI தகவல் என்பது, Flex நிறுவனத்தின் தகவல்களுக்கு மட்டுமல்லாமல் நமது வாடிக்கையாளர்கள், வழங்குநர்களின் தகவல்களுக்கும் பொருந்தும்.

MNPI தகவலுக்கான உதாரணங்களில் பின்வருபவை உள்ளடங்குகின்றன:

  • வருவாய் தொடர்பான தகவல்கள் மற்றும் எதிர்காலக் கணிப்புகள்
  • நிறுவன இணைப்புகள் மற்றும் கையகப்படுத்தல்கள்
  • புதிய தயாரிப்பு உருவாக்கம்
  • குறிப்பிடத்தக்க ஒப்பந்தத்தையோ அல்லது வாடிக்கையாளரையோ கையப்படுத்துதல் அல்லது இழத்தல்
  • நிலுவையில் உள்ள அல்லது அச்சுறுத்திய பெரிய சட்ட வழக்கு அல்லது அரசாங்க விசாரணைகள்
  • முக்கிய நிர்வாக மாற்றங்கள்
  • இணையப் பாதுகாப்பு நிகழ்வுகள்

உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்

எங்கள் திட்டப்பணியின் ஒரு புதிய கட்டம் குறித்து, வாடிக்கையாளர் ஒருவரோடு எனது குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எங்களது கூட்டங்களில் ஒன்றின் போது, இந்த வாடிக்கையாளர் நிறுவனம், அவர்களது துறையில் இருக்கும் இன்னொரு பெரிய நிறுவனத்தோடு இணைந்து விடும் என்று ஒருவர் குறிப்பிட்டார். அந்தக் கூட்டத்தில் இருந்த, எங்களது குழு உறுப்பினர்களில் ஒருவர், அப்படி இணைவது, நமது வாடிக்கையாளரின் பங்கு விலைகளை எவ்வாறு பாதிக்கக்கூடும் என நான் நினைப்பதாகக் கேட்டார். இது ஒரு வித்தியாசமான கேள்வி என்றே நான் நினைத்தேன், ஆனால் அந்த நேரத்தில் நான், “எனக்குத் தெரியாது” என்றே சொன்னேன். என்னுடைய அணியில் இருக்கும் ஒருவர், உள் வர்த்தகத்தில் ஈடுபட பரிசீலனை செய்யக்கூடும் என்று நான் கவலைப்பட வேண்டுமா?

நீங்கள் கவலையடைவதற்கு காரணம் உள்ளது. நிறுவன இணைப்பு பற்றிய பொது அல்லாத தகவல்கள், முதலீட்டாளர்களுக்கு ஆர்வமாக இருக்கும். ஒரு வாடிக்கையாளர் குறித்ததாக இருந்தாலும் கூட, அதுபோன்ற தகவல்களின் அடிப்படையில் செயல்படுவது, அல்லது வெளிப்புற முதலீட்டாளர்களுக்கு அது போன்ற தகவல்களைக் குறிப்பாகக் கொடுப்பது, Flex நிறுவனக் கொள்கைகளுக்கும், சட்டத்திற்கும் எதிரானதாகும். பிரச்சினை குறித்து உங்கள் குழு உறுப்பினரிடம் பேசுங்கள், மற்றும் சாத்தியமான விளைவுகளைப் பற்றி தெளிவாக இருங்கள். அந்த விஷயத்தை, ஒரு மேலாளரிடமும் தெரிவித்து விடுங்கள், அல்லது உங்கள் கவலையை நன்னெறி மற்றும் இணக்க நடவடிக்கை குழுவினரைத் தொடர்பு கொண்டு தெரிவியுங்கள். நாம் ஒருபோதும் MNPI தகவலைத் தனிப்பட்ட ஆதாயத்திற்குப் பயன்படுத்துவதில்லை.

தொடர்ந்து வாசிக்கவும்

அனைத்து வர்த்தகத் தடைகள், வணிகத் தடையாணைகள், மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுச் சட்டங்கள் ஆகியவற்றிற்கு கீழ்ப்படிதல்

அடுத்த பிரிவு