உலகெங்கிலும் நம்பிக்கையைக் கட்டியமைத்தல்

நமது சமூகங்களுடன் ஈடுபடுதல்

நமது சமூகங்களில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளுமாறு ஒவ்வொருவரையும் நாங்கள் ஊக்குவிக்கிறோம். அரசியல் நடைமுறைகள், அறநலப் பணிகள் ஆகிய இரண்டுமே, நமது சமுதாயங்களுக்குத் துணைபுரிவதற்கான சிறந்த வழிகள்.

எனினும், அரசியல் மற்றும் அறநலச் செயல்பாடுகளை, நமது சொந்த நேரத்தில் தான் செய்தாக வேண்டும். அதுபோன்ற செயல்பாடுகள் ஒரு போதும் Flex நிறுவனச் சொத்துக்களை ஈடுபடுத்தவோ அல்லது ஈடுபடுத்துவதாகத் தோன்றச் செய்யவோ கூடாது. நாம் பின்வரும் நிலைகளில், நமது சமூகங்களோடு மிகச் சிறப்பாக நம்மை ஈடுபடுத்திக் கொள்கிறோம்:

 • நமது குறிப்பிட்ட அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடுமாறு எவரையும் ஒருபோதும் கட்டாயப்படுத்தாத போது
 • எந்த அறநலச் செயல்பாடுகளிலும் பங்கேற்க எவருக்கும் ஒருபோதும் நெருக்கடி கொடுக்காமல் இருக்கும் போது, Flex நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளவை உட்பட
 • Flex நிறுவனத்தின் சார்பாக, அறநலப் பணிக ள் அல்லது அரசியல் பங்களிப்புக ள்அல்லது பரப்புரை நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு முன்பாகவோ அல்லது ஈடுபடுவதற்கு முன்பாகவோ அனுமதி பெறும் போது
 • Flex நிறுவனத்தின் வளங்களை (நிறுவன நேரம் உட்பட) எந்த விதமான அரசியல் பங்களிப்புகளுக்கும் பயன்படுத்துவதற்கு முன்பாக முன் அனுமதி பெறும்போது

அரசியல் பங்களிப்புகள்

“அரசியல் பங்களிப்புகள்” அரசியல் ரீதியான ஓர் அமைப்பிற்கோ, வேட்பாளருக்கோ அல்லது அரசாங்க அலுவலருக்கோ கொடுக்கப்படுகிறது. அதுபோன்ற பங்களிப்புகளில் பின்வருபவை உள்ளடங்குகின்றன:

 • நேரடியான மற்றும் மறைமுகமான பணப்பட்டுவாடாக்கள்
 • செலவுகளுக்காகப் பணப்பட்டுவாடா செய்தல்
 • கடன்கள், முன்பணங்கள், வைப்பு நிதிகள் மற்றும் பணப் பரிசுகள்
 • எந்த வித சேவையையும் பரிசாக அளித்தல்
 • சந்தாக்கள், உறுப்பினர் தகுதிகள் மற்றும் நுழைவுச் சீட்டுக்கள்
 • விளம்பரம் செய்யும் இடத்தை வாங்குதல்
 • அரசியல் பணியாளர்களுக்கு இழப்பீடு கொடுத்தல்
தொடர்ந்து வாசிக்கவும்

நீண்டகாலம் நிலைக்கும் விதத்தில் பணியாற்றுதல்

அடுத்த பிரிவு