முன்னுரை

நமது தலைமைச் செயல் அலுவலரிடமிருந்து வந்துள்ள ஒரு குறிப்பு

CEO

Flex நிறுவனத்தில், சிறப்பானதோர் வழியைக் காணவும், கட்டுப்பாடு மற்றும் குறிக்கோளுடன் வேகமாக முன்னேறிச் செல்லவும் மற்றும் எப்போதும் சரியான காரியங்களையே செய்யவும் நாம் கடுமையாக முயற்சிக்கும் அதே வேளையில் நாம் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருப்பதன் மூலமாக நாம் நமது முக்கிய மதிப்புகள் மற்றும் பணியாற்றும் விதங்களைக் கொண்டு நாம் முன்னோக்கிப் பயணிக்கிறோம். கடந்த அரை நூற்றாண்டாக நாம் பெற்று வரும் தொழில் வெற்றிக்கு, நமது Flex நிறுவனப் பணியாளர்கள் மத்தியிலும், நமது வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் மத்தியிலும் காணப்படும் நேர்மை, நாணயம் மற்றும் வெளிப்படைத்தன்மையே மிகப்பெரிய காரணமாக உள்ளது. ஒரு நன்னெறியற்ற முடிவினால் நம்பிக்கையை சட்டென்று இழந்து விடலாம்.

உதாரணமாக, “நான் எடுக்கப் போகும் முடிவை அல்லது நடவடிக்கையை என் சக பணியாளர்களிடம் அல்லது எனது குடும்ப உறுப்பினர்களிடம் வெளிப்படுத்தினால் அதனால் நான் பெருமையடைவேனா?” என்று உங்களிடம் நீங்களே கேட்டுக்கொள்வதே ஒரு பொற்கால விதியாகும். அதற்கான பதில் இல்லை என்றால், அப்போது நீங்கள் அந்த முடிவை மறுபரிசீலனை செய்து, சரியான காரியத்தையே செய்ய வேண்டும்.

நமது, வணிக நடத்தை விதி மற்றும் நன்னெறி (“நமது விதி”) தான், உயர்ந்த தரநிலைகளைத் தக்க வைத்துக்கொள்ள நமக்கு உதவும் ஒரு கருவியாகும். அதை விரிவாக மறுஆய்வு செய்து பார்க்க அவகாசம் எடுத்துக்கொள்ளும்படியும், அதிலுள்ளவற்றைப் பரிச்சயப்படுத்திக் கொள்ளவும், அதன் தேவைகளுக்கு இணங்கி நடக்கவும் நான் உங்கள் எல்லாரிடமும் கேட்டுக்கொள்கிறேன். நமது நடத்தை விதி நம் எல்லோருக்கும் பொருந்துகிறது, மற்றும் இங்கே விவரிக்கப்பட்டுள்ள எதிர்பார்ப்புகளையும், ஆபத்துக்களையும், ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நமது நடத்தை விதியால் எல்லாவற்றையும் உள்ளடக்க இயலாது மற்றும் இங்கே முழுமையாகத் தீர்த்து வைக்கப்படாத கேள்விகள் அல்லது கவலைகள் உங்களுக்கு இருக்கக்கூடும். அது போன்ற நிகழ்வுகளில் நீங்கள் வெளிப்படையாகப் பேசி கேள்விகளைக் கேட்க வேண்டும். சட்டத்தையோ, ஒழுங்குமுறைகளையோ அல்லது நமது நடத்தை விதியையோ மீறக்கூடிய ஏதேனும் நடத்தை இருப்பதாக நமக்குத் தெரிய வரும் போது, நம் எல்லோருக்குமே அதைப் பற்றி பேசுவதற்கான பொறுப்பு உள்ளது. வெளிப்படையாக பேசுபவர்களுக்கு அல்லது விசாரணைகளில் துணைபுரிபவர்களுக்கு ஆதரவு அளிக்கப்படும் மற்றும் வெளிப்படையாக பேசுபவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் எந்த ஒரு பழிவாங்கும் நடவடிக்கையும் சகித்துக்கொள்ளப்படமாட்டாது.

Flex நிறுவனம், ஒரு சிறப்பான நிறுவனமாகும், இதில் ஒரு அங்கமாக இருப்பதில் நான் பெருமையடைகிறேன். இவ்வுலகினை மேம்படுத்தும் பொருட்டு உலகளாவிய அளவில் மிகவும் நம்பப்படும் தொழில்நுட்பத்தை கொண்ட நிறுவனமாகவும், வழங்கல் தொடர் மற்றும் உற்பத்திக்கான தொழில்நுட்ப தீர்வுகளை அளிக்கும் பங்குதாரராகவும் மாறும் நமது குறிக்கோளை அடைய நமது மதிப்புகளும், நமது நடத்தை விதிகளும் அடிதளமாக இருக்கின்றன. நமது பணியாளர்கள், திறமையானவர்கள், சிந்தித்து செயல்படுபவர்கள் மற்றும் அர்ப்பணிப்பு நிறைந்தவர்கள். இந்த முக்கியமான தகவல்களைப் பரிசீலித்துப் பார்க்க நீங்கள் எல்லாரும் அவகாசம் எடுத்துக் கொள்வீர்கள் என்று எனக்குத் தெரியும் மற்றும் Flex நிறுவனம் தொடர்ந்து ஒரு நன்னெறியான, இணக்கமான நிறுவனமாக இருக்க உதவி செய்வதில் விழிப்புடன் இருங்கள்.

அன்பு கலந்த மரியாதைகளுடன்,ரேவதி அத்வைத்தி
தலைமைச் செயல் அலுவலர்

தொடர்ந்து வாசிக்கவும்

நமது மதிப்புகள்

அடுத்த பிரிவு