ஒருவர் மற்றவரோடு நம்பிக்கையை கட்டமைத்துக் கொள்ளுதல்

பன்முகத் தன்மை, சமத்துவம், அனைவரையும் உள்ளடக்குதல் ஆகியவற்றிற்காக அர்ப்பணித்துக் கொள்ளுதல்

நம்மிடையே உள்ள வித்தியாசங்கள் தான் நம்மை வலிமையுள்ளவர்களாக ஆக்குகின்றன என்பதையே நாம் நம்புகிறோம்.

பின்வருவனவற்றிற்காக Flex நிறுவனம் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது:

  • ஒவ்வொருவரும், அவர்களுடைய தனித்துவமான பங்களிப்புகள் மற்றும் தொலைநோக்குப் பார்வைகளுக்கு ஏற்றபடி மதிக்கப்படும் ஒரு பன்முகத்தன்மை கொண்ட சமத்துவமான, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு பணியிடத்தைக் கட்டமைத்துப் பராமரித்தல்
  • அனைவருக்கும் வாய்ப்புகளை விரிவடையச் செய்யும் பொருட்டு நமது வணிகப் பரிவர்த்தனைகளில் பன்முகத்தன்மை, சமத்துவம், அனைவரையும் உள்ளடக்குதல் ஆகியவற்றை ஊக்குவித்தல்
  • நாம் செயல்படுகிற சமுதாயங்களில், பன்முகத்தன்மை, சமத்துவம், அனைவரையும் உள்ளடக்குதல் ஆகியவற்றிற்கு ஆதரவு அளித்தல்

Flex நிறுவனத்தில், இத்தகைய மதிப்பிற்கு உகந்தவாறு வாழும் பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உள்ளது.

வித்தியாசங்களைக் கொண்டாடுங்கள். நியாயமும், நீதியும் தேவை. சொந்த உணர்வு மூலம் வலுப்படுத்துதல்.

சமமான வாய்ப்பு

நாம் அனைவரும் சமத்துவமான வாய்ப்பைப் பெறவும், நியாயமாக நடத்தப்படவும் நமக்கு உரிமையுள்ளது. சட்டத்தால் பாதுகாப்பு அளிக்கப்படும் எந்த ஒரு குணாதிசியத்தின் அடிப்படையிலும் பாகுபாடு காட்டப்படுவதை நாங்கள் தடை செய்கிறோம், இதில் பின்வருவபவை உள்ளடங்கும்:

  • பாலினம்
  • வயது
  • இயலாமை
  • இனக்குழு, தாய்நாடு, இனம் அல்லது நிறம்
  • மதம்
  • பாலியல் அடையாளம் அல்லது பாலியல் சார்பு
  • குடும்ப அந்தஸ்து, கர்ப்பம் உட்பட
  • இராணுவ வீரர்கள் அல்லது ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள்

 

வேலையின் எந்த அம்சங்கள் தொடர்பான முடிவுகளும், அந்த வேலைக்கான தகுதிகளின் அடிப்படையிலேயே இருக்க வேண்டும்.

தொடர்ந்து வாசிக்கவும்

பணியிட வன்முறையானது முற்றிலும் சகித்துக்கொள்ளப்பட மாட்டாது

அடுத்த பிரிவு