தனிப்பட்ட மற்றும் இரகசியமானத் தகவல்களைப் பாதுகாத்தல்
நமது பணியின் போது, நாம் அடிக்கடி இரகசியமானத் தகவல்களை அணுகவும், உருவாக்கவும், பயன்படுத்தவும் செய்கிறோம். நமது தகவல் அமைப்புகளை சட்டவிரோதமாக அணுகுவதோ அல்லது Flex நிறுவனத்தின் இரகசியமான அல்லது தனியுரிமையானத் தகவல்களை வேறு எந்த வகையிலும் அங்கீகரிப்படாத முறையில் வெளிப்படுத்துவதோ நமது நிறுவனத்திற்கும், நமது பணியாளர்களுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடும் மற்றும் அவை நமது போட்டியிடும் நிலையை பலவீனப்படுத்தக்கூடும்.
தகவல்களின் தனிப்பட்ட மற்றும் இரகசியத்தன்மையைப் பாதுகாக்கும் அனைத்துச் சட்டங்களுக்கும் நாம் இணங்கி நடக்க வேண்டும். தனிப்பட்ட மற்றும் இரகசியமான தகவல்களை அங்கீகரிக்கப்படாத அல்லது முறையற்ற விதத்தில் அணுகுவதை அல்லது பயன்படுத்துவதைத் தடுக்கவும், அவற்றை மேலாண்மை செய்யவும் நாம் உரிய நடவடிக்கைகளை எடுக்கிறோம். இதில், நமக்கு அணுகும் வசதி அளிக்கப்படக்கூடும், வாடிக்கையாளர் தரவுகளை அல்லது தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாப்பதும் உள்ளடங்குகிறது.
நாமெல்லாரும் எப்போதுமே, நமது தகவல்களைப் பாதுகாப்பதில் ஒரு பங்கை வகிக்கிறோம். அச்சு நகல், மின்னணு மற்றும் வாய்மொழி வடிவங்கள் உள்ளிட்ட எந்த வடிவிலும் இரகசியமானத் தகவல்களை முறையற்ற விதத்தில் வெளிப்படுத்துவதற்கு எதிரான, முதல் வரிசைப் பாதுகாப்பு அரணாக நாம் இருக்கிறோம். பணியில் இருக்கும் போதும், பணிக்குப் பிறகும், அல்லது Flex நிறுவனத்தோடு வணிகம் செய்யும் போதும், நாம் தனிப்பட்ட மற்றும் இரகசியமானத் தகவல்களைப் பேணிப் பாதுகாத்து, தகவல்களைப் பெற அனுமதி பெற்றுள்ளவர்களிடம் மட்டுமே அதை தெரிவிக்க வேண்டும். மாற்றுதல் மற்றும் சேமித்தல் உட்பட ஆக்குவது முதல் அழிப்பது வரை, இரகசியத் தகவல்களை அச்சு நகல், மின்னணு வடிவம் மற்றும் பிற வடிவங்கள் உள்ளிட்ட அனைத்து வடிவங்களிலும் பொருத்தமான வகையில் விவரச்சீட்டு இட்டு பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இரகசியத் தகவல்கள் என்றால் என்ன?
“இரகசியத் தகவல்கள்” என்றால் பொது மக்களுக்கு பொதுவாகக் கிடைக்கப்பெறாத அல்லது இரசியமானது என நியாயமாகப் புரிந்து கொள்ளக்கூடிய நமது நிறுவனத்தின், நமது பங்குதாரர்களின் அல்லது பணியாளர்களின் தகவல்கள் எனப் பொருள்படுகின்றது.
இதில், சட்டம் அனுமதிக்கும் அளவுக்கு, உங்களுடைய தனிப்பட்ட சம்பளம் மற்றும் உங்கள் வேலைக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து நீங்கள் மற்றவர்களுக்கு வெளிப்படுத்தும் தகவல்கள் உள்ளடங்குவதில்லை.
இரகசியத் தகவல்களுக்கான சில உதாரணங்கள் என்னென்ன?
- ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு
- நிதி, செலவு மற்றும் வரவுசெலவு குறித்த தரவுகள்
- வியாபாரத் திட்டங்கள், எதிர்காலக் கணிப்புகள் மற்றும் வியூகங்கள்
- விலையை நிர்ணயிக்கும் தகவல்கள்
- தயாரிப்புகளுக்கான செயல்திட்டங்கள்
- சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை தொடர்பானத் தரவுகள்
- வழங்குநர், வாடிக்கையாளர் மற்றும் வணிகப் பங்குதாரர் குறித்த தகவல்கள்