உலகெங்கிலும் நம்பிக்கையைக் கட்டியமைத்தல்

சரியான வழியில் வெற்றி பெறுதல்

பொறுப்புமிக்க புத்திக்கூர்மையின் வாயிலாக, நாம் எண்ணங்களை மக்களின் வாழ்வை மாற்றும் தயாரிப்புகளாக உருமாற்றுகிறோம்.

நமது இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பணியைத் தொடர்வதன் மூலமாகவும், நமது மதிப்புகளுக்கு இணங்கி நடப்பதன் மூலமாகவும் நாம் சந்தையில் வெற்றி பெற்றுக்கொண்டிருக்கிறோம். நாம் ஒரு போதும், விலை நிர்ணய சூதாட்டம் அல்லது வெளிவரும் தயாரிப்புகளில் கட்டுப்பாடுகள் போன்ற, நியாயமற்ற வணிக நடைமுறைகளில் ஈடுபடக்கூடாது. ஒரு நியாயமான சந்தையே ஆரோக்கியமான சந்தையாக இருக்கும். நாம் எப்போதுமே வாடிக்கையாளர்களோடும், வழங்குநர்களோடும், போட்டி நிறுவனங்களோடும், நியாயமான முறையில் பரிவர்த்தனையில் ஈடுபட வேண்டும்.

சரியான வழியில் வெற்றிபெற, நாம் பின்வருவனவற்றைச் செய்ய வேண்டும்:

 • நமது ஊக்குவிப்பு, விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பான விஷயங்களில், உண்மையான அறிக்கைகள் மட்டுமே இருப்பதை உறுதி செய்ய வேண்டும்
 • சலுகையாக பெற்ற தகவல்களை ஒருபோதும் தவறாகப் பயன்படுத்தக் கூடாது அல்லது பொருள் சார்ந்த உண்மைகளைத் தவறாகச் சித்தரிக்கக்கூடாது
 • சட்டப்பூர்வமாகவும், நன்னெறியின் அடிப்படையிலும் வணிக நுண்ணறிவைச் சேகரிக்க வேண்டும்
 • நாம் எங்கெல்லாம் வணிகம் செய்கிறோமோ அங்கெல்லாம், அனைத்து விதமான நம்பிக்கையின்மை மற்றும் போட்டி தொடர்பான சட்டங்கள் பின்பற்றப்பட வேண்டும்
 • விலைகளை நிர்ணயம் செய்யவோ, சந்தைகளைப் பிரிக்கவோ அல்லது நியாயமான போட்டியைக் குறைத்து மதிப்பிடவோ, ஒரு போதும் போட்டியாளர்களோடு ஒத்துழைக்கக்கூடாது
 • வர்த்தக சங்கங்களில் பங்கேற்பதற்கு முன்பாகவோ, உச்சபட்ச விலையை நிர்ணயம் செய்யும் செயல்பாடுகளில் அல்லது இது போன்ற பிற செயல்பாடுகளில் பங்கேற்பதற்கு முன்பாகவோ, எப்போதும் சட்டத்துறையில் இருந்து ஒப்புதலைப் பெற்றுக்கொள்ளுங்கள்
 • சட்டத்துறையிடமிருந்து ஒப்புதல் பெறாமல் வெளியில் உள்ள நபர்களோடு பின்வரும் வியாபாரத் தலைப்புகள் குறித்து ஒருபோதும் கலந்துரையாடாதீர்கள்:
  • விலை நிர்ணயம் செய்தல் அல்லது விலை நிர்ணயக் கொள்கை, விற்பனை தொடர்பான விதிமுறைகள், செலவுகள், சந்தைப்படுத்தும் திட்டங்கள் அல்லது வியூகத் திட்டங்கள், உற்பத்தி அளவுகள்
  • சாத்தியமான இணைப்புகள் மற்றும் கையகப்படுத்தல்கள், வியாபாரக் கூட்டு முயற்சிகள் அல்லது மற்ற கூட்டணிகள்
  • வாடிக்கையாளர்கள், தயாரிப்புகள், சேவைகள், விற்பனைகள், வழங்கு பொருட்கள் அல்லது வணிகப் பகுதிகள் ஆகியவற்றை ஒதுக்கீடு செய்தல்
  • பிரத்யேகமான பரிவர்த்தனை ஏற்பாடுகள்
  • வழங்குநர்கள் அல்லது வாடிக்கையாளர்கள் மீது கட்டுப்பாடுகளை விதித்தல் அல்லது ஏற்பாடுகளைச் செய்தல்
  • வழங்குநர் அல்லது வாடிக்கையாளர் ஒருவரோடு மேற்கொள்ளப்படும் ஓர் ஒப்பந்தத்திற்கான குறிப்பிட்ட விதிமுறைகள்
  • பிற தனியுரிமையான அல்லது இரகசியமானத் தகவல்கள்
தொடர்ந்து வாசிக்கவும்

நமது வழங்கல் தொடரில் நம்பிக்கையையும் பொறுப்புணர்வையும் கட்டமைத்தல்

அடுத்த பிரிவு