உலகெங்கிலும் நம்பிக்கையைக் கட்டியமைத்தல்

நமது வழங்கல் தொடரில் நம்பிக்கையையும் பொறுப்புணர்வையும் கட்டமைத்தல்

நாம் தகுதியின் அடிப்படையிலேயே வழங்குநர்களைத் தேர்ந்தெடுத்துப் பணியாற்றுகிறோம். ஒரு நம்பகமான உலகளாவிய நிறுவனமாக, நமது வழங்குநர்களும், பிற வணிகப் பங்குதாரர்களும் நம்முடைய உயர்ந்த நன்னெறித் தரநிலைகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்.

நாங்கள் பொருத்தமான மற்றும் முறையாக அங்கீகாரம் பெற்ற ஆதாரங்களிலிருந்து தான் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துகிறோம். குறுகிய காலத்தில் வணிகத்தைத் கையகப்படுத்தும் செயல்முறையானது, நன்னெறியற்ற முறையில் மேற்கொள்ளப்பட்டால், நீண்ட கால அளவில் அது நமது புகழுக்குச் சேதம் ஏற்படுத்துவதாக அமையும்.

நமது வழங்கல் தொடரில் நம்பிக்கையையும், பொறுப்புணர்வையும் உறுதி செய்ய, நாம் பின்வருவனவற்றைச் செய்ய வேண்டும்:

  • சாத்தியமான வழங்குநர்கள் மற்றும் வணிகப் பங்குதாரர்கள் அனைவரோடும், போட்டிபோடக்கூடிய, நியாயமான மற்றும் வெளிப்படையான ஏலமெடுக்கும் நடைமுறையைப் பயன்படுத்த வேண்டும்
  • வணிகத்தை வாங்கும் போது, Flex நிறுவனத்தின் அனைத்து உலகளாவிய வாங்கும் கொள்கைகள் மற்றும் பொருத்தமான பணியிடக் கொள்கைகள் ஆகியவற்றைப் பின்பற்ற வேண்டும்
  • ஒரு வழங்குநரை பரிசீலனையில் எடுத்துக்கொள்வதற்கு பிரதி உபகாரமாக கையூட்டுகளையோ அல்லது மற்ற வகையான பணமளித்தல்களையோ ஒருபோதும் ஏற்றுக்கொள்ளக்கூடாது
  • நமது வழங்குநர்கள் மற்றும் வணிகப் பங்குதாரர்களின் ஏலமெடுக்கும் நடைமுறை அல்லது சட்டங்கள் அல்லது கொள்கைகளின் விதிமீறல்கள் தொடர்பான எந்தப் பிரச்சினைகள் குறித்தும் உடனடியாகப் புகார் அளிக்க வேண்டும்
  • பாதுகாப்பு, ஒப்பந்தம், சுற்றுச்சூழல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான கடமைகள் மற்றும் கொள்கைகளுக்கு இணங்கி நடப்பதை உறுதி செய்ய, நமது வழங்கல் தொடருக்குள், பொதுவாகக் கிடைக்கப்பெறும் வழங்குநருக்கான விதிமுறைகளுடன் வழங்குநரின் சொந்தத் தணிக்கைகள் மற்றும், Flex நிறுவனப் பணியாளர் தணிக்கைகள் ஆகிய இரண்டையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
  • சட்டங்கள், ஒழுங்குமுறைகள் மற்றும் ஒப்பந்தம் விதிமுறைகளுக்கு முழுமையாக இணங்கி நடப்பதை உறுதி செய்ய, Flex நிறுவனத்தின் சார்பாக அரசாங்கத்துடன் பரிவர்த்தனை மேற்கொள்ளும் அனைத்து மூன்றாம் தரப்பு நபர்களிடமும் உரிய கவனத்தைச் செலுத்த வேண்டும்

பொறுப்புள்ள வணிகக் கூட்டணி

பொறுப்புள்ள வணிகக் கூட்டணியின் (RBA) ஸ்தாபக உறுப்பினராக மற்றும் செயல் உறுப்பினராக Flex நிறுவனம் உள்ளது. வழங்கல் தொடரின் பாதுகாப்பு நடைமுறைகள் உட்பட, RBA-வின் நடத்தை விதிக்கு வழங்குநர்கள் இணங்கி நடக்க வேண்டும் என்று நாம் அவசியப்படுகிறோம்.

தொடர்ந்து வாசிக்கவும்

துல்லியமான கணக்குப் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளைப் பராமரித்தல்

அடுத்த பிரிவு