உலகெங்கிலும் நம்பிக்கையைக் கட்டியமைத்தல்

இலஞ்சம் அல்லது ஊழல் முற்றிலும் சகித்துக்கொள்ளப்பட மாட்டாது

எப்போதுமே நியாயமாக நடந்துகொள்ளும் ஓர் உலகளாவிய தொழில் நிறுவனமாக இருக்கும் நாம் எந்த வகையிலும் முறையற்ற பணம் பெறுதல் மூலமாக ஒரு போதும் நியாயமற்ற அனுகூலத்தை நாடக் கூடாது.

Flex நிறுவனம் எந்த வகையான இலஞ்சம், கையூட்டுகள் மற்றும் முறையற்ற பணம் பெறுதல் ஆகியவற்றைத் தடை செய்கிறது. நாம் எங்கெல்லாம் வணிகம் செய்கிறோமோ அங்கெல்லாம் பொருந்தக்கூடிய இலஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் ஒழிப்புச் சட்டங்களுக்கு இணங்கி நடக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், அமெரிக்க அந்நிய நாட்டு ஊழல் நடைமுறைகள் சட்டம் (U.S. Foreign Corrupt Practices Act (FCPA)) மற்றும் இங்கிலாந்து இலஞ்சச் சட்டம் 2010 (U.K. Bribery Act 2010) ஆகியவை உள்ளடங்குகின்றன.

நாம் பின்வருவனவற்றைச் செய்யும் போது, நாம் இலஞ்சத்தையும், பிற வடிவங்களில் அமைந்த ஊழலையும் தடுக்கிறோம்:

  • வியாபார முடிவுகளில் ஆதிக்கம் செலுத்துவதற்காக எவர் ஒருவருக்கும் மதிப்புள்ள எதையும் தரவோ அல்லது தருவதாக உத்திரவாதமளிப்பதோ அல்லது கொடுப்பதோ கூடாது
  • நாம் செய்ய இயலாத பணமளித்தலைச் செய்வதற்காக மூன்றாம் தரப்பினர் ஒருவரை (ஆலோசகர், முகவர் அல்லது வணிகப் பங்குதாரர் போன்றவர்கள்) ஒருபோதும் பணியமர்த்தக்கூடாது
  • வியாபார முடிவு ஒன்றில் ஆதிக்கம் செலுத்துவதற்காக, மதிப்புள்ள எதையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளக்கூடாது
  • அரசாங்கங்களோடும், அரசாங்க அதிகாரிகளோடும் பரிவர்த்தனையில் ஈடுபடும் போது, கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
  • அரசாங்க நிறுவனங்களில் இருந்து வருகிற விசாரணைகள் எதற்கும் பதிலளிப்பதற்கு முன்பாக, சட்டத் துறையைத் தொடர்பு கொள்ள வேண்டும்

இலஞ்சங்கள், கையூட்டுக்கள் மற்றும் வசதி செய்து தருவதற்கான பணமளித்தல்கள் என்றால் என்ன?

“இலஞ்சம்” என்பது, மதிப்பு கொண்ட ஏதேனும் ஒன்றாகும். அது ரொக்கப்பணமாகவோ, பரிசுப் பொருளாகவோ, பொழுது போக்காகவோ அல்லது வணிகத்திற்காக அளிக்கப்படும் வசதிகளாகவோ இருக்கலாம். இன்னொருவரின் செயல்பாடுகளில் அல்லது வணிக முடிவுகளில் முறையற்ற விதத்தில் ஆதிக்கம் செலுத்தும் நோக்கத்தில் இலஞ்சம் கொடுக்கப்படுகிறது.

ஒரு “கையூட்டு” என்பது, வணிகத்தைப் பெறுவதற்காக அல்லது ஒரு முறையற்ற வியாபார அனுகூலத்திற்காக, பணத்தை அல்லது மதிப்புள்ள ஏதேனும் ஒன்றை அளிப்பதாகும்.

“வசதி செய்து கொடுப்பதற்காகப் பணம் கொடுத்தல்” என்பது வழக்கமாக ஒரு சிறு தொகையாகவே இருக்கும். இவை, வழக்கமான, விருப்புரிமையற்ற அரசாங்க நடவடிக்கை ஒன்றைப் பெறுவதற்காக அல்லது துரிதப்படுத்துவதற்காக அரசாங்க அலுவலர்களுக்குக் கொடுக்கப்படுகின்றன. Flex நிறுவனத்தில் வசதி செய்து கொடுப்பதற்காகப் பணம் கொடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

வலுக்கட்டாயமாக, ஒரு பணிமளித்தலை மேற்கொள்ளுமாறு அல்லது ஏற்றுக்கொள்ளுமாறு பணியாளர் ஒருவர் வற்புறுத்தப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

வலுக்கட்டாயமாகப் பணமளிப்பது இந்தக் கொள்கையை மீறுவதாக அமையாது. வலுக்கட்டாயமாக பணமளித்தலை மேற்கொள்ளுமாறு ஓர் ஊழியர் கட்டாயப்படுத்தப்படும் போது, அவற்றைச் செய்வதற்கு முன்பாக, அப்பணியாளர் அது குறித்து புகாரளித்திட வேண்டும். அப்படிச் செய்வது சாத்தியமில்லை என்றால், கூடிய விரைவில் நமது புகார் அளிக்கும் ஆதாரவளங்கள் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி புகார் அளிக்க வேண்டும்.

 

அரசாங்க அதிகாரிகள்

நமது வணிகப் பரிவர்த்தனைகளில் அடிக்கடி உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் ஈடுபடுகின்றன. அரசாங்கங்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளோடு பணியாற்றும் போது, நாம் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அரசாங்க அதிகாரிகளோடு சேர்ந்து மேற்கொள்ளப்படும் ஊழல் நடவடிக்கைகள், Flex நிறுவனத்தின் புகழைக் கடுமையாகப் பதிப்படையச் செய்வதால் அது கடுமையான அபராதங்களுக்கு வழிவகுக்கக்கூடும். ஓர் அரசாங்க நிறுவனத்தோடு அல்லது அரசாங்க அலுவலரோடு மேற்கொள்ளப்படும் எந்தவிதமான மற்றும் அனைத்து ஒப்பந்தங்களும் சட்டத்துறையால் மறுஆய்வு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட வேண்டும். Flex நிறுவனம் அரசாங்க அதிகாரிகளுக்கு வழங்கத் திட்டமிடுகிற எந்தவிதமான பரிசுப் பொருட்களுக்கும் அல்லது பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் இது பொருந்தும். பரிசுப்பொருட்கள் மற்றும் வசதிகள் ஆகியவற்றை அங்கீகரிக்கும் கருவியைப் பயன்படுத்தி முன்-அனுமதிகள் பெறப்படுகின்றன.

தொடர்ந்து வாசிக்கவும்

பரிசுப் பொருட்கள் மற்றும் பொழுதுபோக்கு

அடுத்த பிரிவு