பணியிட வன்முறையானது முற்றிலும் சகித்துக்கொள்ளப்பட மாட்டாது
Flex நிறுவனம், எங்கெல்லாம் வணிகம் மேற்கொள்கிறதோ அங்கெல்லாம், பணியிட வன்முறையானது முற்றிலும் சகித்துக்கொள்ளப்படமாட்டாது. மற்றொரு நபருக்கு அச்சுறுத்தலாக அமைகிற அல்லது உடல் ரீதியிலான காயத்தை ஏற்படுத்தக்கூடிய எந்த நடத்தையையும் நாங்கள் தடை செய்கிறோம்.
பணியிடத்தில் வன்முறைச் செயல் ஒன்று நடைபெறுவதை நீங்கள் பார்த்தாலோ அல்லது அனுபவித்தாலோ, உடனடியாக, அங்குள்ள பாதுகாப்பு அதிகாரியைத் தொடர்பு கொண்டு பின்னர் உங்கள் பகுதியின் அதிகாரிகளைத் (காவல்துறை) தொடர்பு கொள்ளவும். வன்முறை அச்சுறுத்தலை நீங்கள் பார்த்தாலோ அல்லது அனுபவித்தாலோ, உடனடியாக அந்தப் பகுதியின் பாதுகாப்புக் குழுவினரைத் தொடர்பு கொள்ளவும். பணியிடம் என்பதில், Flex நிறுவனத்தின் பணியிடம், தங்குமிடம், போக்குவரத்து வசதி (பேருந்துகள்) மற்றும் / அல்லது நிறுவன நிகழ்ச்சி ஆகியவை உள்ளடங்குகின்றன.
தடைசெய்யப்பட்ட நடத்தைகள்
பணியிட வன்முறையில், உடல் ரீதியான தாக்குதல்கள், வன்முறை அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டும் நடத்தை ஆகியவை உள்ளடங்குகின்றன. தடைசெய்யப்பட்ட நடத்தைகளில், பின்வருபவை மட்டுமல்லாது பிறவும் உள்ளடங்குகின்றன:
- வாகனத்தை நிறுத்தும் இடங்கள் உள்ளிட்ட, பணியிடத்தில் ஆயுதங்களை வைத்திருத்தல் (பொருந்தக்கூடிய உள்ளூர் சட்டங்களின் படி)
- வாய்மொழியானத் தாக்குதல்கள்
- அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டுதல்
- உடல் ரீதியாக முரட்டுத்தனமாக நடந்து கொள்ளுதல்
- பின்தொடர்ந்து செல்லுதல்
- அவமதித்தல்
வன்முறை அச்சுறுத்தல்கள்
வன்முறை அச்சுறுத்தல்கள் வாய்மொழியாகவோ, வாய்மொழியைச் சாராமலோ அல்லது உடல் ரீதியாகவோ இருக்கலாம். வன்முறை அச்சுறுத்தல் என்பது, வாய்மொழியான மற்றும்/அல்லது வாய்மொழி அல்லாத மிரட்டல் என்று வரையறுக்கப்படுகிறது, இதில் பாதிக்கப்படுபவர் ஒரு வன்முறை அச்சுறுத்தலை உணர்கிறார்.