ஒருவர் மற்றவரோடு நம்பிக்கையை கட்டமைத்துக் கொள்ளுதல்

பழிவாங்குவதை நாங்கள் சகித்துக் கொள்வதில்லை

Flex நிறுவனம் பழிவாங்குவதைச் சகித்துக் கொள்வதில்லை. பழிவாங்கும் செயலில் ஈடுபடுபவர்கள், பணி நீக்கம் உட்பட பணிநீக்கம் வரையிலான ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

நல்லெண்ணத்தில் செயல்படும் பின்வரும் நபர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பழிவாங்கும் நடவடிக்கைகள் எந்த விதத்திலும், சகித்துக்கொள்ளப்படமாட்டாது:

  • அதாவது நமது நடத்தை விதி, நமது கொள்கைகள் அல்லது சட்டம் தொடர்பான விதிமீறல்கள் குறித்து புகாரளிப்பவர்
  • நமது நடத்தை விதியோ, நமது கொள்கைகளோ அல்லது சட்டமோ மீறப்படுதல் தொடர்பாக மேற்கொள்ளப்படும் எந்த ஒரு விசாரணயிலும் பங்கேற்பவர்
  • Flex நிறுவனத்தின் அல்லது நமது பங்குதாரர்களின் வணிக நடைமுறைகள் குறித்த அறிவுரையை நாடுபவர் அல்லது கேள்விகளைக் கேட்பவர்

அனைத்து வகையானபழிவாங்கும் நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது. வேலை நேரங்கள், திட்டமிடுதல், பணி நிபந்தனைகள், பதவி அல்லது பணிப் பொறுப்புகள் ஆகியவற்றில் மாற்றங்கள் செய்வதும் பழிவாங்கும் நடவடிக்கையில், உள்ளடங்கக்கூடும். இரகசியமாகப் புகாரளித்த அல்லது சாட்சியாக இருந்த ஒருவரைப் பற்றித் தெரிந்து கொள்ள முயற்சித்தல் அல்லது அவருடைய அடையாளத்தை வெளிப்படுத்துதல், அல்லது புகாரளித்த அல்லது சாட்சியாக இருந்த ஒருவர் பகிர்ந்து கொண்ட உண்மைகளை அறிந்துகொள்ளும் பொருட்டு கேள்விகளைக் கேட்டல் மற்றும் இது போன்ற பிற செயல்கள் ஆகியவற்றிற்குத் தடை விதிக்கப்படுகிறது.

Flex நிறுவனம் அரசாங்கத்தின் வேண்டுகோள்களுக்கும், விசாரணைகளுக்கும் ஒத்துழைப்பு அளிக்கிறது. ஏதேனும் ஓர் அரசாங்க அறிவிப்பு, நீதிமன்ற அழைப்பாணை, தேடுதல் உத்தரவு, நேர்காணலுக்கான வேண்டுகோள் அல்லது வழக்கத்திற்கு மாறான வேறு ஏதேனும் வேண்டுகோள் வரும்பட்சத்தில் உடனடியாக உங்கள் பகுதியில் உள்ள சட்டத்துறையை அல்லது பிராந்திய சட்டத் துறையைத் தொடர்பு கொள்ளவும்.

உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்

நான் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை ஒன்றை எனது மேலாளருக்கு தெரிவித்தேன், ஆனால் அவருக்கு அது மகிழ்ச்சியளித்ததாகத் தெரியவில்லை. அதற்குப் பிறகு, அவர் என்னை இரவுப் பணிக்கு மாற்றி விட்டார். நான் அவ்வப்போது இரவுப் பணியில் வேலை செய்யவும் விரும்புகிறேன், ஆனாலும் எல்லா நேரங்களிலும் அப்படி விரும்புவதில்லை. எனக்கு குழந்தைகள்இருக்கிறார்கள் என்று அவருக்குத் தெரியும், அவர்களை மாலை நேரங்களில் பார்ப்பது எனக்கு முக்கியம்.. என்னை மிரட்ட வேண்டும் என்பதற்காக எனது பணி நேரத்தை அவர் மாற்றியிருக்கிறாரா?

உங்களது பணி நேரத்தை மாற்றுவது என்ற உங்கள் மேலாளரின் முடிவு, நீங்கள் முன்வைத்த பாதுகாப்புப் பிரச்சினைக்குப் பதிலளிக்கும் செயலாக இருக்கக்கூடும். அப்படி இருந்தால், அது ஒரு பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கக்கூடும். உங்கள் பிரச்சினையைத் தெரிவிக்க, மனித வளக் குழுவையோ அல்லது நன்னெறி மற்றும் இணக்க நடவடிக்கைக் குழுவையோ தொடர்பு கொள்ளவும், அல்லது எங்களது புகாரளிக்கும் வசதியைப் பயன்படுத்தி இரகசியமான புகார் ஒன்றை அளிக்கவும். நாங்கள் பழிவாங்கும் நடவடிக்கையைச் சகித்துக் கொள்வதில்லை.

உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்

என்னுடைய அனைத்து சக பணியாளர்களோடும் நான் பொதுவாகவே நன்கு பழகுகிறேன். இருந்தாலும், சமீபத்தில், எனக்கும், என் குழு உறுப்பினர் ஒருவருக்கும் இடையே ஓர் இறுக்கம் உருவாகி விட்டது. அப்பெண்ணுக்கு என்னைவிடக் குறைந்த பணிகளே ஒதுக்கப்படுவதை நான் கவனித்தேன் மற்றும் எங்களது மேலாளர் எப்போதும் அவளிடம் மென்மையாகவே நடந்து கொள்வதாகத் தோன்றியது. அவள் விரும்பிய போதெல்லாம் அவளை வீட்டிலிருந்து பணி செய்ய அவர் அனுமதிக்கிறார் மற்றும் அவள் செய்த வேலைகளை மீண்டும் நோக்குமாறும், தவறுகள் ஏதேனும் இருந்தால் திருத்துமாறும் என்னிடம் கேட்டுக்கொள்கிறார். அதன்பின்பு தான், அவளுக்கும், எனது மேலாளருக்கும் இடையே ஒரு காதல் உறவு இருக்கிறது என்று நான் கண்டறிந்தேன். இது குறித்து எனது மேலாளரிடம் நான் எதிர்த்துக் கேட்ட போது, அதைப் பற்றிக் கண்டுகொள்ளாமல் இருக்கும்படியும், இல்லையென்றால் என்னை புதிய மேலாளர் ஒருவரின் கீழ் இருக்கும், வேறொரு குழுவிற்குப் பணி மாற்றம் செய்து விடுவேன் என்றும் சொன்னார். நான் என்ன செய்ய வேண்டும்?

உங்கள் மேலாளரின் நடத்தை ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. காதல் ஆர்வம் இருப்பதாலேயே ஒரு பணியாளரைப் பிரத்தியேகமாக நடத்துவது முறையற்ற செயலாகும், மற்றும் நீங்கள் பிரச்சினைக்கு எதிராக குரல் கொடுப்பதன் காரணமாக உங்களைப் பணிமாற்றம் செய்வதென்பது, ஒரு பழிவாங்கும் நடவடிக்கையாகும். உங்கள் பிரச்சினையைத் தெரிவிக்க, அல்லது ஒரு இரகசியமான புகாரை மேற்கொள்ள, இந்நிகழ்வை உடனடியாக மனித வளக் குழுவிற்கு அல்லது நன்னெறி மற்றும் இணக்க நடவடிக்கைக் குழுவிற்குத் தெரிவிக்கவும்.

தொடர்ந்து வாசிக்கவும்

அனைவரையும் மரியாதையாக நடத்துதல்

அடுத்த பிரிவு