அனைவரையும் மரியாதையாக நடத்துதல்
நமது அடிப்படையான பணியாற்றும் முறைகளில் ஒன்றாக விளங்கும் பிற நபர்களுக்கு மதிப்பு மற்றும் மரியாதை அளித்தல் என்ற நடைமுறையின்படி, பாலியல் ரீதியான துன்புறுத்தல் மற்றும் ஒடுக்கப்படுதல் உள்ளிட்ட அனைத்து வகையான துன்புறுத்தல் அல்லது தவறாகப் பயன்படுத்தப்படுதல் இல்லாமல் சுதந்திரமாக இருக்கும் ஒரு பணியிடத்தைப் பராமரிக்கவே நாங்கள் கடும் முயற்சி எடுக்கிறோம்.
துன்புறுத்தல் என்பது வாய்மொழியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ மேற்கொள்ளப்படலாம் மற்றும் அதில், சமூக ஊடகம் உட்பட, முறையற்ற விமர்சனங்கள், மின்னணு ரீதியாகப் பகிர்ந்து கொள்ளப்படும் படங்கள் அல்லது மற்ற விஷயங்கள் ஆகியவையும் உள்ளடங்கக்கூடும். Flex நிறுவனக் கொள்கையை மீறுவதற்கு இவற்றைப் பணியிடத்தில் தான் பகிர்ந்திருக்க வேண்டும் என்ற வரையறை இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
எங்களுடைய பணியாளர்கள் தான் எங்களுடைய மிகவும் மதிப்புமிக்க சொத்தாக விளங்குகின்றனர் மற்றும் நாங்கள் ஒரு பாதுகாப்பான பணிச்சூழலை உருவாக்கித் தரும் பொருட்டு எங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ளோம். அவ்வாறு ஒரு சூழலை உருவாக்கித் தருவதன் மூலமாக, பணியாற்றுவதற்கான மிகச் சிறந்த மற்றும் மிக அதிக ஆக்கத்திறன் கொண்ட வழிகளைக் கண்டறிவதில் நாங்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கிறோம். பாதுகாப்பாகப் பணியாற்றுவதற்கான நமது திறனைப் பாதிப்படையச் செய்யக்கூடிய, எந்தவொரு போதைப் பொருளின் ஆதிக்கத்தின் கீழும் நாம் ஒருபோதும் பணியாற்றக்கூடாது. குறைந்தபட்சம், நாம் பொருந்தக்கூடிய பணியிட ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான அனைத்து தேவைகளுக்கும் எப்போதும் இணங்கி நடக்க வேண்டும் மற்றும் பணியிடத்தில் உள்ள தங்கும் இடத்தில், அல்லது Flex நிறுவனம் வழங்குகிற போக்குவரத்து வசதியில் ஏதேனும் பாதுகாப்பற்ற நிலைமைகள் இருந்தால் அது குறித்து எப்போதும் உடனடியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்
எனது கவனத்தை முழுமையாகச் சிதறடிக்காமல் இருக்கும் வரைக்கும், பணியிடத்தில் சிரித்துப் பேசிக் கொள்வதை நான் கண்டுகொள்வதில்லை. ஆனால், சமீபத்தில், எனது குழு உறுப்பினர்களில் ஒருவர் மிகவும் அதிகமாக சிரித்துப் பேசிக்கொண்டே இருக்கிறார். அவர் நான் உட்பட, இங்கிருப்பவர்களின் உடல் அங்கங்கள் குறித்து பாலியல் ரீதியிலான விமர்சனங்களைச் செய்து வருகிறார் மற்றும் இதனால் பணியாளர்களின் முகத்தில் ஏற்படும் அசௌகரியத்தை என்னால் பார்க்க முடிகிறது. அது குறித்து அவரிடம் நான் பேச முயற்சித்தேன், ஆனால் அவரோ, வேடிக்கையாகப் பேசுவதை என்னால் இரசிக்க முடியவில்லை என்று சொல்கிறார். நான் என்ன செய்ய வேண்டும்?
உங்கள் சக பணியாளரின் நடத்தை ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல. மனிதர்களின் உடல்கள் குறித்து தேவையற்ற பாலியல் ரீதியிலான விமர்சனங்களைச் செய்வது, ஒருவகையான பாலியல் துன்புறுத்தலேயாகும். துன்புறுத்தல் அல்லது தவறாகப் பயன்படுத்தப்படுதல் இல்லாமல், நமது பணியை மிகச் சிறந்த விதத்தில் செய்ய நம் அனைவராலும் இயல வேண்டும். இந்த விஷயம் குறித்து உங்கள் மேலாளருடனோ, மனிதவள அலுவலருடனோ அல்லது நன்னெறி மற்றும் இணக்க நடவடிக்கைக் குழுவிடமோ கலந்து பேசி உங்கள் பிரச்சினையைத் தெரிவியுங்கள் அல்லது ஓர் இரகசிய அறிக்கையை அளியுங்கள்.