ஒருவர் மற்றவரோடு நம்பிக்கையை கட்டமைத்துக் கொள்ளுதல்

கேள்விகளைக் கேட்டல் மற்றும் பிரச்சினைகளை எழுப்புதல்

எழக்கூடிய அனைத்து சாத்தியமான சூழ்நிலைகளையும் நம்முடைய விதிகளால் விவரித்துச் சொல்ல இயலாது. நமது நடத்தை விதியில் தேவையான பதில் இல்லை என்றாலோ அல்லது நமது நடத்தை விதியில் ஏதேனும் உங்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை என்றாலோ, நீங்கள் கண்டிப்பாகக் கேள்விகளைக் கேட்க வேண்டும். பதில்களைக் கண்டுபிடிப்பதற்கு நாமெல்லாருமே பொறுப்பானவர்கள் தான்.

எழுகிற கேள்வியின் வகையைப் பொருத்து, நாம் பின்வருபவர்களைத் தொடர்பு கொள்ளலாம்:

Flex நிறுவனம், வெளிப்படையாகப் பேசுவதன் முக்கியத்துவத்தை அடையாளம் கண்டு கொள்கிறது மற்றும் ஒவ்வொரு வாய்ப்பிலும் அதை ஊக்குவிக்கிறது. பிரச்சினைகளுக்கு குரல் எழுப்புவது அல்லது மேம்படுத்துவதற்கான பகுதிகளை அடையாளம் காண்பது, ஓர் ஒற்றைப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதை விட மேம்பட்டதாகும்; அது நிறுவனத்தில் நேர்மறையான மாற்றங்களுக்கும், சிறப்பான பணிச்சூழலுக்கும் வழிவகுக்கிறது. வெளிப்படையாகப் பேசுவது, Flex நிறுவனம் தன்னை மேம்படுத்திக் கொள்வதில் உதவுகிறது.

நமது நடத்தை விதியிலோ அல்லது பொருந்தக்கூடிய சட்டத்திலோ அல்லது ஒழுங்குமுறையிலோ ஒரு விதிமீறல் நடந்திருக்கலாம் என்று நீங்கள் சந்தேகிக்கும் போது, அது குறித்துப் புகாரளிப்பதற்கான பொறுப்பு உங்களுக்கு உள்ளது. ஒவ்வொரு புகாரளிக்கும் முறையிலும் இரகசியத்தன்மைக்கான அதே பாதுகாப்பும், மற்றும் அனுமதிக்கப்படும் இடங்களில் அடையாளம் இல்லாமல் புகாரளிக்கும் வசதியும் வழங்கப்படுகின்றன. எந்த ஒரு விதிமீறல் குறித்தும் ஒரு நாளில் 24 மணி நேரமும், வாரத்தில் 7 நாட்களும் புகாரளிக்கலாம். மொழிபெயர்ப்புச் சேவைகள் கிடைக்கப்பெறுகின்றன.

Flex நிறுவனத்தின் நன்னெறி மற்றும் இணக்க நடவடிக்கைக் குழு, நமது நடத்தை விதியோ, நமது கொள்கைகளோ அல்லது பொருந்தக்கூடிய சட்டங்களோ மீறப்படுதல் தொடர்பாக மேற்கொள்ளப்படும் அனைத்துப் புகார்களையும் மறுஆய்வு செய்கிறது. Flex நிறுவனம், புகார்கள் குறித்த விசாரணைகளை நடத்தி, பொருத்தமான இடங்களில், நமது நடத்தை விதியையோ அல்லது நமது கொள்கைகளையோ மீறியதற்காக, பணி நீக்கம் உட்பட பணிநீக்கம் வரையிலான ஒழுங்கு நடவடிக்கையை அமல்படுத்துகிறது.

Flex நிறுவனக் குழுவிலும், அதனுடன் இணைந்த தொழில் நிறுவனங்களிலும் உள்ள ஒவ்வொரு உறுப்பினர் உட்பட பிரச்சினை கொண்ட எவர் ஒருவரும்:

  • பின்வரும் முகவரியில் எங்களுக்கு மின்னஞ்சல் செய்யலாம் compliance.counts@flex.com (அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்தால் dataprotection@flex.com என்பதில் மின்னஞ்சல் செய்யலாம்)
  • எங்களது மூன்றாம்-தரப்பு நன்னெறிக்கான நேரடித் தொலைபேசி எண் வாயிலாகவோ, அல்லது புகாரளிக்கும் இணையதளமான www.flexethicshotline.com வாயிலாகவோ எங்களைத் தொடர்பு கொள்ளவும்
தொடர்ந்து வாசிக்கவும்

பழிவாங்குவதை நாங்கள் சகித்துக் கொள்வதில்லை

அடுத்த பிரிவு