நலன் முரண்பாடுகளைத் தவிர்த்தல்
Flex நிறுவனமானது, உறவுகளின் மீது கட்டமைக்கப்பட்ட ஒரு நிறுவனமாகும். அத்தகைய உறவுகள் நம்பிக்கையின் மீதே கட்டமைக்கப்பட்டுள்ளன.
நமது வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகப் பங்குதாரர்களின், நம்பகமான பங்குதாரராக, நலன் முரண்பாடுகளைத் தவிர்ப்பது நமது கடமையாக உள்ளது. நலன் முரண்பாடுகள், நமது உறவுகளை, Flex நிறுவனத்திற்குள்ளும், வெளியிலும் குறைத்து மதிப்பிடச் செய்துவிடும் அல்லது அதற்குத் தீங்கிழைத்து விடும். நலன் முரண்பா ட்டை உருவாக்கக்கூடிய, அல்லது அதுபோன்ற தோற்றத்தை தரக்கூடிய எந்தச் செயல்பாடுகளையும் தொடர்வதை நாம் தவிர்க்க வேண்டும்.
Flex நிறுவனப் பணியாளர்களாக, நாம் செய்ய வேண்டியவை:
- எப்போதுமே, சாத்தியமான நலன் முரண்பாடுகள் குறித்து உடனடியாக நமது நேரடி மேலாளரிடம் தகவல் தெரிவித்து விட்டு நலன் முரண்பாட்டுக் கருவியைப் பயன்படுத்தி அவற்றை வெளிப்படுத்தவும்.
- Flex நிறுவனத்தால் பயன்படுத்திக் கொள்ள இயலும் வணிக வாய்ப்புகளையோ அல்லது நமது வேலை மூலமாக அல்லது Flex நிறுவனச் சொத்துக்கள் மூலமாக கண்டறியப்படும் வணிக வாய்ப்புகளையோ ஒரு போதும் நமக்கானதாக எடுத்துக்கொள்ளக்கூடாது
- ஒருபோதும் Flex சொத்துக்களை அல்லது தகவல்களைத் தனிப்பட்ட ஆதாயத்திற்காகவோ அல்லது குடும்ப உறுப்பினர் அல்லது நண்பர் ஒருவரின் நலனுக்காகவோ பயன்படுத்தாதீர்கள்
நலன் முரண்பாடு என்றால் என்ன?
ஒரு தனிநபரின் தனிப்பட்ட உறவானது, Flex நிறுவனத்தின் மிகச் சிறந்த நலனோடு முரண்படும் போது, அல்லது Flex நிறுவனத்தின் சார்பாக எடுக்கும் முடிவுகளை முறையற்ற விதத்தில் பாதிப்பதாகத் தோன்றக் கூடும் போது, அங்கே ஒரு “நலன் முரண்பாடு” நிலவுகிறது. முரண்பாடுகள் அல்லது முரண்பாடுகளின் தோற்றங்கள், Flex நிறுவனத்திற்குக் கடுமையான தீங்கை விளைவிக்கக்கூடும் அல்லது நமது புகழை அல்லது நலன்களைச் சேதப்படுத்தக்கூடும்.
நமது பங்குதாரர்கள், நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நெருக்கமான நண்பர்கள் ஆகியோரின் உறவுகளும், நலன்களும் கூட, உண்மையான அல்லது சாத்தியமான நலன் முரண்பாட்டை உருவாக்கக்கூடும். இவற்றை Flex நிறுவனத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
சாத்தியமான நலன் முரண்பாடுகளுக்கான உதாரணங்கள்
Flex நிறுவனப் பணியாளர் ஒருவரின் குடும்ப உறுப்பினர், பங்குதாரர் அல்லது நெருங்கிய நண்பர் ஒருவர் ஒரு Flex நிறுவனப் பணியாளராகவோ அல்லது வணிகப் பங்குதாரராகவோ இருக்கிறார் அல்லது ஆக விரும்புகிறார்.
ஒரு Flex நிறுவனப் பணியாளர் அல்லது குடும்ப உறுப்பினர், பங்குதாரர் அல்லது Flex நிறுவனப் பணியாளரின் நெருங்கிய நண்பர் ஒருவர், Flex நிறுவனத்திற்குப் போட்டியாகச் செயல்படுகிற, அல்லது Flex நிறுவனத்தோடு வியாபாரம் செய்ய விரும்புகிற அல்லது வியாபாரம் செய்கிற ஒரு நிறுவனத்தின் பங்குப் பத்திரத்தை வாங்கி வைத்திருக்கிறார் அல்லது வாங்க விரும்புகிறார்.
ஒரு Flex நிறுவனப் பணியாளரோ அல்லது Flex நிறுவனப் பணியாளரின் குடும்ப உறுப்பினரோ அல்லது நெருங்கிய நண்பர் ஒருவரோ, Flex நிறுவனம் ஆர்வம் காட்டும் ஒரு வியாபார வாய்ப்பில் ஆர்வமாக இருக்கிறார்.
ஒரு Flex நிறுவனப் பணியாளர் அல்லது ஒரு Flex நிறுவனப் பணியாளரின் குடும்ப உறுப்பினர், பங்குதாரர் அல்லது நெருங்கிய நண்பர் ஒருவர், மற்றொரு இலாப நோக்கம் கொண்ட அல்லது இலாப நோக்கம் இல்லாத நிறுவனத்தில் தலைமைப் பதவியை அல்லது இயக்குநர் பதவியை ஏற்றுக்கொள்ள விரும்புகிறார்.
ஒரு Flex நிறுவனப் பணியாளர் அல்லது ஒரு Flex நிறுவனப் பணியாளரின் குடும்ப உறுப்பினர், பங்குதாரர் அல்லது நெருங்கிய நண்பர் ஒருவர், இரண்டாவதாக ஒரு வேலையை ஏற்றுக்கொள்ள விரும்புகிறார் அல்லது மற்றொரு நிறுவனத்தில் அல்லது இலாப நோக்கம் இல்லாத மற்றொரு நிறுவனத்தில் ஆலோசகராக இருக்க விரும்புகிறார்.
மேலுள்ள சூழ்நிலைகள் அனைத்திலுமே ஏற்படக்கூடிய சாத்தியம் கொண்ட அந்த முரண்பாடு குறித்த தகவலை உடனடியாக தெரிவிப்பது தான் நாம் செய்யக்கூடிய சரியானச் செயலாக இருக்கும்.
உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்
நான் எப்போதுமே நல்ல வியாபார வாய்ப்புகளைத் தேடிக்கொண்டிருக்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பாக, Flex நிறுவனத்தில் பணியாற்ற ஆரம்பிப்பதற்கு முன்பாக, சுத்தப்படுத்தும் பொருட்களைத் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தின் ஒரு சிறிய பங்கை நான் வாங்கினேன். இங்கே Flex நிறுவனத்தில், முழுமையான பணியமர்த்தல் செயல்முறைக்கும் நான் உட்பட்டேன் மற்றும் அதைக் குறித்து ஒருபோதும் சிந்தித்துக் கூடப் பார்க்கவில்லை. இறுதியில் இந்த நிறுவனமே, Flex நிறுவனத்தின் தரையைப் பராமரிக்கும் தொழிலில், அதற்குப் பொருட்களை வழங்கும் ஒரு நிறுவனமாக இருந்தது. நாம் வணிகத்தில் போட்டி போடும் ஒரு துறை அது என்று எனக்குத் தெரியவே தெரியாது! இப்போது, எனது நலனைவெளிப்படுத்தாமல் ஒரு தவறு செய்து விட்டதாக நான் உணர்கிறேன். நான் என்ன செய்ய வேண்டும்?
இந்த நிறுவனத்தில் உங்களுடைய நிதிப் பங்களிப்பின் அளவை உடனடியாகத் தெரிவிக்க வேண்டும். Flex நிறுவனத்திற்குப் பொருட்களை வழங்கும் ஒரு நிறுவனத்தில் உங்களுக்குள்ள நிதி சார்ந்த பங்கு, ஒரு சாத்தியமான நலன் முரண்பாடாகும். அடுத்த படிநிலைகள் குறித்து உங்கள் மேலாளரிடம் பேசுங்கள் மற்றும் உங்களுடைய இந்தச் சூழ்நிலைக்கு நீங்கள் எப்படி வந்தீர்கள் என்பதை நேர்மையாக எடுத்துக்கூறுங்கள். சாத்தியமான நலன் முரண்பாடு ஒன்றுக்கு மிகச் சிறந்த வகையில் பதிலளிப்பது, எப்போதுமே அதை வெளிப்படையாகத் தெரிவித்து விடுவது தான்.
கூடுதலாக, இன்னொரு Flex நிறுவனப் பணியாளரிடத்தில் குடும்ப ரீதியான அல்லது காதல் ரீதியான உறவைக் கொண்டிருப்பதும், ஒரு நலன் முரண்பாட்டை ஏற்படுத்தலாம். Flex நிறுவனத்தின் பணியில் உறவுகள் தொடர்பான கொள்கையின் படி, இதுபோன்ற உறவுமுறைகளை, HR மற்றும் நிர்வாகத்திடம் தெரிவிக்க வேண்டும். ஓரே அறிக்கை வரியில்இருப்பவர்கள் குடும்ப ரீதியான அல்லது காதல் ரீதியான உறவுகளைக் கொண்டிருப்பது அவர்களுக்கு ஒருபோதும் ஏற்றதல்ல.